Tuesday, March 03, 2009

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீமான் போட்டியிடுவார் - இயக்குநர் தங்கர்பச்சான்


புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரைப்பட இயக்குநர் சீமான் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காகச் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் 2.3.2009 திங்கள்கிழமை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச் சாலைக்கு வந்தார்.
காலை 11 மணி முதல் இயக்குநர் சீமானைப் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனுவை பெற்றுக் கொண்ட சிறைத்துறையினர் எந்தவித பதிலையும் கூறவில்லை.


இதனால் சுமார் ஒரு மணிநேரம் பொறுத்துப் பார்த்த தங்கர்பச்சான், புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச் செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் நண்பகல் 12 மணிக்கு சிறையின் வாயிலில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த காலாப்பட்டு போலீஸ் எஸ்.ஐ. கே.வரதராஜன் சிறைத் துறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 'அனுமதி உண்டா இல்லையா என்று சொல்லாமல் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்' என்று கேட்டார். பின்னர் அவர் அனைவரையும் சிறைக்குள் அழைத்துச் சென்றார்.


பின்னர் இயக்குநர் தங்கர்பச்சன் உட்பட அனைவரும் சீமானை சந்தித்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள சீமானைச் சந்தித்து விட்டு வந்த திரைப்பட இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் பத்திரிகையாளர்களிடம் கூறியது:


தமிழர்களின் உரிமைகள், உணர்வுகளைக் காணாமல் போகச்செய்தவர்கள் அரசியல்வாதிகள். காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே ஏற்க மறுக்கின்றனர். இது தொடர்பாக 27 முறை பேசியும் முறையான தண்ணீர் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. கச்சத்தீவைப் பறி கொடுத்ததால் தமிழக மீனவர்கள் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.


தமிழனுக்காகவும், தமிழினத்திற்காகவும் அரசியல்வாதிகள் குரல் எழுப்பவில்லை. குரல் கொடுத்திருந்தால் மத்திய அரசு செவிமடுத்திருக்கும். தமிழன்தான் குரல் எழுப்புகிறான். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழக தலைவர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் ஒன்று கூடி பேசியிருந்தால் போதும். மத்திய அரசு பணிந்திருக்கும். ஆனால், அதை யாரும் செய்யவில்லை.
தற்போது தமிழர்களுக்காகவும், தமிழினத்திற்காகவும் குரல் கொடுக்கும்காலம் வந்துவிட்டது.


மற்றவர்கள் போல் திரைப்படம் உண்டு தன் சம்பாத்தியம் உண்டு என்று இல்லாமல் சீமான் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். சீமான் மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வரும் நாயாளுமன்றத் தேர்தலில் சீமான் போட்டியிட உள்ளார். சீமானிடம் ஓட்டு வங்கி உள்ளதால் அவரை சிறையில் வைத்துவிட வேண்டும் என்று அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். தமிழக இளாஞர்கள், மாணவர்கள் அவரை வெற்றிப் பெற செய்வார்கள். தமிழ் மக்கள் சீமானுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அவரை நான் உட்பட பலரும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
சிறையில் இருந்தபடி தமிழ் இனம், மொழிக்காக சீமான் குரல் கொடுத்து வருகிறார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச்செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

36 comments:

Anonymous said...

//சீமானிடம் ஓட்டு வங்கி உள்ளதால் அவரை சிறையில் வைத்துவிட வேண்டும் என்று அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர்.//

LoL. Good jokedaa

குழலி / Kuzhali said...

ஏற்கனவே நண்பர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் விசயம் இது, சீமான் போட்டியிட விரும்பினால் சில நாட்கள் தேர்தல் வேலை செய்வதிலிருந்து முடிந்த அளவு பண உதவி வரை செய்ய நண்பர்கள் தயாராக உள்ளார்கள், சீமான் சிவகங்கையில் நின்று சிதம்பரத்துக்கு அல்வா தர வேண்டுமென்பதே எனது அவா...

மதிபாலா said...

கண்டிப்பாக சீமான் தேர்தலில் நிற்க வேண்டும்...நின்று இந்த அரசியல்வியாதிகளின் கண்ணில் மண்ணைத் தூவ வேண்டும்...

அதுதான் எமது ஆசை.

வனம் said...

வணக்கம்

நான் இந்த தேர்தலை புரக்கணிக்கும் முடிவிலிருந்தேன்,


சீமான் போட்டியிட்டால் நிச்சயம் அவருக்கு பக்கபலமாக இருப்பேன்

நன்றி
இராஜராஜன்

சினேகிதி said...

\\வரும் (((நாயாளுமன்றத்))) தேர்தலில் சீமான் போட்டியிட உள்ளார். சீமானிடம் ஓட்டு வங்கி உள்ளதால் அவரை சிறையில் வைத்துவிட வேண்டும் என்று அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர்.\\

அரியாங்குப்பத்தார் said...

ஓட்டு பொறுக்கும் அரசியல் நமக்கு வேண்டாம் தலைவா!

காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்கச்செய்வோம்.

வேறு எவன் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை...

காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணிலிருந்து ஒழிய வேண்டும்... அந்தப்பணியை நாம் அனைவரும் தீவிரமாக செய்யவேண்டும்.

பின்னூட்டம் பெரியசாமி.. said...

காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் காணாமல் போக வேண்டும். சீமான் தங்கபாலுவை எதிர்த்து நின்று பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். சீமான் போட்டியிடும் தொகுதியில் நாமும் களமிறங்கி தேர்தல் பணியாற்றிடுவோம்.

Tharuthalai said...

சீமான் போட்டியிட விரும்பினால் முடிந்த அளவு பண உதவி செய்ய தயாராக உள்ளார்கள்.

mathi said...

/* //சீமானிடம் ஓட்டு வங்கி உள்ளதால் அவரை சிறையில் வைத்துவிட வேண்டும் என்று அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர்.//

LoL. Good jokedaa

*/

This man is from Hamsha's man. Please be careful, he would talk like a tamil but he is sinhalese and knows tamil doing all the dirty works on behalf of hamsha

Anonymous said...

முள்ளை முளளால்தான் எடுக்கவேண்டும்.

சீமான் இந்த அரசியல் கோமாளிகளுக்கு சரியான பாடம் கற்பிப்பார்.

சீமானின் வெற்றிக்கு வலைப்பதிவர்கள் இப்போதே வாழ்த்துக்கள்.

Nambi said...

கண்டிப்பாக சீமான் தேர்தலில் நிற்க வேண்டும்...நின்று இந்த அரசியல்வியாதிகளின் கண்ணில் மண்ணைத் தூவ வேண்டும்...

அதுதான் எமது ஆசை

ரவீ said...

அண்ணன் சீமான் கண்டிப்பாக வெற்றி பெறுவார். தயவுசெய்து போட்டியிடுங்கள்.

Anonymous said...

சீமான் நின்றால் நிச்சயம் தோற்பார்.
திமுக,அதிமுகவினரின் பண,ஆள் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.யாருக்கு ஆதரவு அல்லது
தேர்தல் புறக்கணிப்பா என்பதுதான் கேள்வி.

ராஜ நடராஜன் said...

சீமான் தேர்தல் களத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.அப்படியே அமீரையும் கூப்பிட்டு அவருக்கும் ஒரு தொகுதி ஏற்பாடு செய்யுங்கள்.

Bleachingpowder said...

//வரும் நாயாளுமன்றத் தேர்தலில் //

இது எழுத்து பிழை என்றால் தயவுசெய்து திருத்தி விடுங்கள். If it was meant to be like this then, i strongly condemn this sentence.

ஆழிக்கரைமுத்து said...

'' அரசியல் பிழைப்பு அயோக்கியன் "
- தந்தை பெரியா

" அரசியல்வாதியானவன் எவனும் யோக்கியவானாக இருக்க இயலாது " - உலக மொழி

சீமானும் அந்த சாக்கடையில் நுழைய போறாரா?

" எங்கள் தலைவன் ****** மேடையில் ஏறிப்பேசியதும் இல்லை தேர்தலின் சாக்கடையில் இறங்கியதுமில்லை "

محمد said...

انه سيفقد
وإني أدعو الله

محمد والدة زوجها said...

محمد ابن عاهرة.
محمد الشقيقتين مارس الجنس من قبل الكلاب والذئاب

அருள் said...

இது பலரது விருப்பம், அண்ணன் சீமான் அவர்கள் போட்டியிட வேண்டும், அவருக்காக தமிழினத்திற்க்காக தேர்தல் களத்தில் வேலை செய்யவும் முடிந்த அளவு பண உதவி செய்யவும் தயார்.......

உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் தமிழின உணர்வாளர்களின் இந்த கருத்தை சிறையில் இருக்கும் அண்ணன் சீமானிடம் கொண்டு செல்லவும்..........நன்றி!

params said...

Now the cat has come out.
All these days Seeman played excellent drama just for capitalizing the emotions for personal gains.

Still some hypocrites are motivating this ugly stunt.

High time people woke up, and aligned behind some true nationalist party like BJP

PARAMS

இரா.சுகுமாரன் said...

//குழலி / Kuzhali said...

ஏற்கனவே நண்பர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் விசயம் இது, சீமான் போட்டியிட விரும்பினால் சில நாட்கள் தேர்தல் வேலை செய்வதிலிருந்து முடிந்த அளவு பண உதவி வரை செய்ய நண்பர்கள் தயாராக உள்ளார்கள், சீமான் சிவகங்கையில் நின்று சிதம்பரத்துக்கு அல்வா தர வேண்டுமென்பதே எனது அவா...//

//Tharuthalai said...

சீமான் போட்டியிட விரும்பினால் முடிந்த அளவு பண உதவி செய்ய தயாராக உள்ளார்கள்.//

குழலி Tharuthalai ஆகியோருக்கு நன்றி

உங்கள் கருத்துக்களை இயக்குனர் சீமானிடம் தெரிக்க முயற்சிக்கிறேன்

Anonymous said...

Mr. Seeman is one of the right person to stand up for the tamils all over the world.
Mr.Seeman you will win in this election. Tamils have a good hope on you.

Anonymous said...

Nalla Seidhi. seeman jeyithal congresskum avargaludaya kootani kayavargalukkum seruppal adithadhu pola irukum. ivarai nirka vaithu inayathil panam thiratungal.

suyechayaga therthalil nirpadhu enpadhu saakadai illai. kootani saakadaiyil seradhavarai
idhai varavekalam.

mraja1961 said...

சீமான் தேர்தலில் நின்று காங்கிரசுவை தமிழ்நாட்டிலிருந்து விரட வேண்டும். என்னுடய ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
மஹாராஜா

params said...

Stupid and probably concocted comments

PARAMS

Anonymous said...

வந்தேன்டா எமன்...

சீமான் தேர்தலில் போட்டியிட வேண்டும்.சிவகங்கையில் நின்றால் சிதம்பரம் தோற்பது உறுதி.

நம்குடும்ப நிகழ்வுபோல் தமிழகத்திலிருந்து மட்டுமல்ல. கடல் கடந்தும் தேர்தல் வேலைக்கு ஆட்கள் வருவார்கள்.
பெரியார் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அது என்ன பெரியார் கொள்கை.
சிறிது திருத்திக்கொள்வோம்.
காங்கிரசை தமிழகம்,புதுவையிலிருந்து ஒழிப்போம்.
மண்ணின் மைந்தன்

Anonymous said...

//High time people woke up, and aligned behind some true nationalist party like BJP
//

//
Stupid and probably concocted comments//

Params,

Are you talking about your own coment above ? Please clarify :)))

ஜேகே - JK said...

சீமான், 40 தொகுதிகளிலும் நிற்க வேண்டும். 40லும் வெற்றி பெருவார்.

Anonymous said...

காங்கிரஸ் எதிர்ப்பு அணி உருவாக்கி காங்கரஸார் போட்டியிடும் அனைத்து தொகுதிகளையும் குறிவைத்து தோற்கடிக்க வேண்டும்.
நாராயணசாமி பாண்டிச்சேரியில் நிறக ஆசைப்படுகிறார்.
ரங்கசாமியை சரிகட்டிவிட்டார்
இந்தியா முழுசும் சொத்து வாங்கி குவிச்ச நாராயணசாமியை மானமுள்ள பாண்டிச்சேரி ஆள்கள் தோற்கடிக்க வேண்டும்.

Anonymous said...

காங்கிரஸ் எதிர்ப்பு அணி உருவாக்கி காங்கரஸார் போட்டியிடும் அனைத்து தொகுதிகளையும் குறிவைத்து தோற்கடிக்க வேண்டும்.
நாராயணசாமி பாண்டிச்சேரியில் நிறக ஆசைப்படுகிறார்.
ரங்கசாமியை சரிகட்டிவிட்டார்
இந்தியா முழுசும் சொத்து வாங்கி குவிச்ச நாராயணசாமியை மானமுள்ள பாண்டிச்சேரி ஆள்கள் தோற்கடிக்க வேண்டும்.

இரா.சுகுமாரன் said...

மதிபாலா, இராஜராஜன், பின்னூட்டம் பெரியசாமி. நம்பி, ரவீ, ராஜ நடராஜன் ஆழிக்கரைமுத்து, அருள் mraja1961 ஆகியோருக்கு நன்றி

உங்கள் கருத்துகளை புதுச்சேரி சிறையில் இருக்கும் திரு சீமான் அவர்களுக்கு தெரியப்படுத்த முயல்கிறேன்.

இரா.சுகுமாரன் said...

அனாநி அய்யா,
//காங்கிரஸ் எதிர்ப்பு அணி உருவாக்கி காங்கரஸார் போட்டியிடும் அனைத்து தொகுதிகளையும் குறிவைத்து தோற்கடிக்க வேண்டும்.
நாராயணசாமி பாண்டிச்சேரியில் நிறக ஆசைப்படுகிறார்.
ரங்கசாமியை சரிகட்டிவிட்டார்
இந்தியா முழுசும் சொத்து வாங்கி குவிச்ச நாராயணசாமியை மானமுள்ள பாண்டிச்சேரி ஆள்கள் தோற்கடிக்க வேண்டும். //

ரெங்கசாமியை சரிகட்ட முடியாது. நாராயணசாமி அவர் குடும்பத்தில் திருமணத்திற்கான அழைப்பை நாராயணசாமி ரெங்கசாமியிடம் கொடுத்தார் அவ்வளவுதான், சரிகட்ட முடிகிற விசயமல்ல ரங்கசாமியை பொருத்தவரை எனவே, நாராயணசாமி நின்றால் தோற்கடிக்க திட்டம் அவர்கள் கூட்டணிகளிலேயே இருப்பதை நீங்கள் பின்னர் அறிந்துகொள்வீர்கள். இன்று தி.மு.கவின் முக்கிய பொருப்பாளரை சந்தித்தேன். தி.மு.க வில் உள்ள முக்கிய புள்ளிகள் நாராயணசாமி மீது உள்ள எதிர்ப்பை என்னிடம் பதிவு செய்தார்.

Surya said...

சீமானை வரவேர்கிரோம்

Anonymous said...

/*/ரெங்கசாமியை சரிகட்ட முடியாது. நாராயணசாமி அவர் குடும்பத்தில் திருமணத்திற்கான அழைப்பை நாராயணசாமி ரெங்கசாமியிடம் கொடுத்தார் அவ்வளவுதான், சரிகட்ட முடிகிற விசயமல்ல ரங்கசாமியை பொருத்தவரை எனவே, நாராயணசாமி நின்றால் தோற்கடிக்க திட்டம் அவர்கள் கூட்டணிகளிலேயே இருப்பதை நீங்கள் பின்னர் அறிந்துகொள்வீர்கள். இன்று தி.மு.கவின் முக்கிய பொருப்பாளரை சந்தித்தேன். தி.மு.க வில் உள்ள முக்கிய புள்ளிகள் நாராயணசாமி மீது உள்ள எதிர்ப்பை என்னிடம் பதிவு செய்தார்.//

நீங்கல்லாம் என்னா பிளான் பண்ணினாலும் சரி என் தலைவன் நாராயணசாமி ஜெயிக்கிறார். இல்லேனா அத்தனை கிராமணிங்களும் நாண்டுகிட்டு செத்துடுறோம். இது எங்க அக்கா தமிழ்செல்வி மேல சத்தியம்.

பார்க்கலாம் நீங்களா நாங்களானு!

நாங்க ரெடி, நீங்க ரெடியா?

Anonymous said...

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குக் கல்லறை!
அடுத்த சட்ட மன்றத் தேர்தலில்
பார்ப்பனீயத்திற்குப் பாடை!
இளைய தலை முறை தயாராகி விட்டது.எந்தக் கொம்பன்,கொம்பச்சியும் மாற்ற முடியாது.

Anonymous said...

நாராயணசாமி விழப்போன காங்கிரஸ் ஆட்சியை தன் புரோக்கர் வேலையால் காப்பாற்றினார்.பாராளுமன்ற அமைச்சர் ஆயிற்றே.பரிசு.
ரங்கசாமியை சோனியாஜி வீட்டுக்கு அனுப்பியது.

எம்.பி.இராமதாஸ் தான் மீண்டும் எம்.பி. ஆக ஆசைப்படறார்.வன்னியர்களின் ஓட்டு வாங்கி ஜெயிச்ச இராமதாஸ் இட ஒதுக்கீட்டுபிதாமகன் டாக்டர் இராமதாஸுக்கு வச்சார் ஆப்பு.
121 காலேஜ் புரபஸர் போஸ்டிங்குஇட ஒதுக்கீடு பின்பற்றாம பாண்டிச்சேரியில் போடப்பட்டுள்ளது.
டெம்பரவரியில் எம்.எல்.ஏ.சிபாரிசில் நுழைந்து கவர்மெண்டு காலேஜ்ஜில் தொத்திக்கொண்டு இருந்த புரப்பச்சர்களிடம் தலைக்கு 2லட்சம் வாங்கிக்கொண்டடு 121 பேருக்கும் ஆக 2.42 கோடி பாண்டியில் பணம் புரண்டது.நீதி விலைபேசப்பட்டது.பெண்கள் சப்ளை உட்ப்பட நடந்து UGC ஒரே வாரத்தில்
கால் லெட்டர் அனுப்பி பெர்சனல் டாக்கில்(இண்டர்வியு இல்லை) அப்பாயிண்ட்மெண்டு ஆர்டர் வாங்கியுள்ளனர்.இண்டர்வியு அட்டண்ட் பண்ணியவர்கள் வீடு வருவதற்குள் அப்பாயிண்ட்மெண்டு ஆடர் வந்துவிட்டது.I.A.S தேர்ந்தெடுக்கும் இடத்தையே வலைத்துவிட்டார்கள்.I.A.S களும் இப்படிதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மக்களுக்கு சந்தேகம் வருகிறது.

முட்டாள் பயல்கள்,சட்டமன்றத்தை சுத்திக்கொண்டு இருந்தவன் எல்லாம்
இன்றைக்கு காலேஜ் புரபஸர்கள்..
புதுச்சேரி இளைஞர்கள் 67 பேர் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கிறார்கள்.இவர்களிடமும் ஓட்டு உள்ளளதால் இவர்களுக்கும் முறையற்ற வேலை வாய்ப்புகள் தரப்பட உள்ளன.
அறிவு இல்லாதவர்ர்களை முறையின்றி பணியில் அமர்த்தப்படுவதால் புதுச்சேரியில் மீண்டும் தரம் இல்லாத கல்வி,தரம் இல்லாத மாணவர்கள் பன்னி பல குட்டி போட்டதுபோல் உருவாக வாய்ய்ப்பு உள்ளது
கல்வித்துறையை புதுச்சேரியில் நாசம் பண்ணியது யுனிவ்வர்ஸிட்டி முன்னாள் புரபஸர் இராமதாஸ் எம்.பியும் மாமா நாராயணசாமியும் எம்.பியும்தான்.
மானமுள்ள புதுச்சேரி மக்களே உங்கள் எதிரிகளை ஒழிக்க ஆயத்தம் ஆகுங்கள்