புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, இயக்குனர் தோழர் சீமான், தோழர் நாஞ்சில் சம்பத் மூவர் மீதும் அடக்குமுறை சட்டமான தேசிய பாதுகாப்பு  சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டித்து வாய் கட்டி - கை விலங்குடன் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 
புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத்தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தந்தைபிரியன், வீராசாமி ,வீர.மோகன், இளங்கோ,  விஜயசங்கர், சுரேசு, இரவிச்சந்திரன் மற்றும்  பொறுப்பாளர்களுடன் பெரியார் திராவிடர் கழக தேழர்களும் பிற தோழமை அமைப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் விலங்கிட்டும் வாயில் கருப்பு துணிகட்டியும் பங்கேற்றனர்.



    
No comments:
Post a Comment