Saturday, May 16, 2009

தமிழகத் தேர்தலில் சீனா, இலங்கை அமோக வெற்றி

பாராளுமன்றத் தேர்தலில் பொதுவாக வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது வழக்கம் இல்லை, ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில்  "கோடிகள் விளையாடியுள்ளது" . இலங்கை பிரச்சனையில் பா.ம.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்களை செய்துவந்துள்ளது. இக்கட்சிகள் வெற்றி பெற்றால் மிகப் பெரிய பிரச்சனை எழும் என நினைத்த வெளிநாட்டு சக்கதிகள் தி.மு.க விற்கு பெருமளவில் பணத்தை கொடுத்து அதன் வெற்றிக்கு அடிகோலியுள்ளன. சீனாவின் முன்னேற்பாட்டில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் பரவலாக அனுப்பி வைக்கப்பட்ட பலர் இந்திய தேர்தலில் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் தி.மு.க அன்னிய சக்திகளின் ஊடுறுவலுக்கு துணைபோயுள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

அதே நேரத்தில் அ.தி.மு.க இருந்த தொகுதியில் அந்த அளவுக்கு பணம் செலவு செய்யவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. இக்கட்சியை பா.ம.க, ம.தி.மு.க கட்சிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியாகவும் அந்த கட்சிக்கு எதிராக அதிக நிதி அளிக்கப் படவில்லையாம். இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி அடைந்துள்ளதால் இரு கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஈழப்பிரச்சனை பேசுவதால் பலன் இல்லை என்று சொல்லி செயலலிதாவையும் பின்னர் திசை திருப்பிவிடலாம் எனவும் இவ்வாறு முடிவெடுத்து செயல் பட்டார்கள் எனவும் தெரிகிறது.

திருமாவளவனும் ஈழப்பிரச்சனையில் ஆபத்தானவராக கருதப்படுவதால் அவர் ஒரு தொகுதியில் தப்பித்தார்.

இந்த தேர்தல் முடிவு " தி.மு.க" கார்பரேட் கம்பெனிக்கு பெரிய வெற்றியாகவும் தமிழினத்திற்கு பெரும் தோல்வியாகவும் அமைந்துள்ளது.

17 comments:

XLmoron said...

மூக்கு உடைந்த பின் என்ன என்ன விளக்கங்கள் கிடைக்கின்றன...!!! ஹ ஹ ஹா...!!!

யட்சன்... said...

உங்க காமெடிக்கு அளவே இல்லையா...

இந்த விசயம் இம்புட்டு லேட்டா உங்களுக்கு யாரு சொன்னாங்க....புத்தர் மாதிரி ஞானோதயம்ல வந்துச்சா....

சொல்றதுதான் சொல்றீங்க இந்தியா பூரா பணம் குடுத்ததா சொல்லீருந்த இன்னும் கொஞ்ச நேரம் சிரிச்சிருக்கலாம்.

படம் முடிஞ்சிருச்சு...எந்திருச்சி வெளிய வாங்க....வந்து நிதர்சனத்த பாருங்க...

இரா.சுகுமாரன் said...

இதில் காமெடி ஏதுமில்லை..

சென்ற வாரம் நண்பர் ஒருவர் என்னிடம் பரபரப்பாக பிரபாகரனை பிடித்துவிட்டார்களாம், என்றார் பரபரப்பாக..

நான் சாதாரணமாக முடியாது என்று முடித்தேன்.

மீண்டும் தொலைபேசி தொல்லை.. பின்னர் டிபன்ஸ்.எல்.கே, விடிவு ஆகிய இலங்கை அரசின் தளத்தில் ஏதுமில்லை என்றேன்.

அதே போல நேற்று ஒரு புறளி, சென்னையில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப் பட்டார் என்று இப்படிப் பட்ட புறளிகள் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் இந்திய வங்கி ஒன்றில் வேலை செய்யும் சிங்களன் ஒருவன் வெளியிட்ட புரளி என நாங்கள் உறுதி செய்து கொண்டோம். இந்திய வங்கியில் சிங்களன் எப்படி வேலைக்கு சேர்ந்தான் என்பது பற்றிதான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

தீப்பெட்டி said...

என்ன இதெல்லாம் புது கதையா இருக்கு?

இரா.சுகுமாரன் said...

//தீப்பெட்டி said...

என்ன இதெல்லாம் புது கதையா இருக்கு?//

கதையல்ல நிஜம்

Anonymous said...

ஸ்பெக்ரம் ஊழல் பணம் தான் செலவு செய்கிறார் என பரவலாக பேச்சு ஆனால் நீங்கள் புது கதை சொல்கிறீர்கள்

Anonymous said...

கருணாநிதி பிழைப்பில் இப்படி மண்ணள்ளி போடலாமா?

Anonymous said...

//ஸ்பெக்ரம் ஊழல் பணம் தான் செலவு செய்கிறார் என பரவலாக பேச்சு ஆனால் நீங்கள் புது கதை சொல்கிறீர்கள்//

முதலில் அப்படித்தான் சொன்னார்கள். பின்னர் அதுவும் இதுவும் என்கிறார்கள்.

Anonymous said...

//XLmoron said...

மூக்கு உடைந்த பின் என்ன என்ன விளக்கங்கள் கிடைக்கின்றன...!!! ஹ ஹ ஹா...!!!//

கருணாநிதியின் அடிமைகள் வாழ்க!

முகுந்தன்

Anonymous said...

//கருணாநிதி பிழைப்பில் இப்படி மண்ணள்ளி போடலாமா?//

கருணாநிதி பிழைப்பில் யாரும் மண்ணள்ளி போட முடியாது. அவர்தான் தமிழர்கள் தலையில் மண்ணை அள்ளிபோடுவார்

Anonymous said...

'இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
'
who says this.are you a patriot who thinks like this.are you not a person who thinks that india is a priosnhouse of nationalities.are you not supporting kashmir militants like huriyat.are you not supporting various separatist movements.

இரா.சுகுமாரன் said...

//who says this.are you a patriot who thinks like this.are you not a person who thinks that india is a priosnhouse of nationalities.are you not supporting kashmir militants like huriyat.are you not supporting various separatist movements.//

ஆமாம், ஆமாம் சில மரமண்டைகளுக்கு இப்படி எழுதினால் தான் புரியும் என்று எழுதினேன்.

இளவமுதன் said...

கருணாநிதி தமிழினத்தை மொத்தமாக ஒழித்துக் கட்டவே தமிழர்கள் வாக்களித்துள்ளார்கள்.

Anonymous said...

எப்படியோ நமக்கு ஒரு தமிழ் ஸ்பீல்பெர்க் கிடச்சிட்டாருப்பா....இன்னாமா திரைக்கதஎல்லாம் எழுதறாரு ....சுகுமார்கண்ணா என்கண்ணே பட்டுடும் போலிருக்கு...உங்கம்மாவ சுத்திபோட சொல்லு சாமி

இரா.சுகுமாரன் said...

நீங்க நினைக்கிறதுக்கு எதிரா இருந்தா அது திரைக்கதையா?

கருணாநிதியின் போர்நிறுத்தம் போன்று ஒரு திரைக்கதை வேறு உண்டா?.

இவ்வளவு ஆண்டாக பாராளுமன்றத் தேர்தலில் காசு கொடுக்காத கருணாநிதி இந்த தேர்தலில் தயாநிதி மாறன் வாக்குக்கு 5000 வரை, மதுரையில் 4000 ஆயிரம் வரை என செய்திகள் வந்தன இந்த பணம் ஏது? மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தைத் தான் கொடுத்தார்கள் என்றாவது சொல்லுங்களேன்.

இலங்கை தூதர் சிங்கள "அம்சா" சில நாட்களுக்கு முன் நக்கீரனை மிரட்டியதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள். நீங்கள் படித்திருந்தால் நினைவிருக்கும், கொஞ்சம் பேசுகிறார்கள் பின்னர் ரேட் பேசுகிறார்கள், அல்லது இங்கேயே மிரட்டுகிரார்கள் அந்த அளவுக்கு இங்கு துளிவிட்டு போயுள்ளனர் அவர்கள். அப்படி ஒரு கூட்டம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?.

இந்த போர்வையில் இந்தியாவில் பலர் தொழில் நிறுவனங்களை இங்கு நடத்துகின்றனர். தெரியுமா உங்களுக்கு?.

புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்களை தொடர்பு கொண்டு அவற்றை மழுங்கடிக்க சில சிங்களர்கள் இங்கு வேலை செய்து வருகிறார்கள் தெரியுமா உங்களுக்கு ?

ஒரு அதிகாரப்பூர்வமான தகவலை நான் பின்னர் எழுதுவேன். என்னிடம் இது பற்றி தகவல் தெரிவித்தவரிடம் இது பற்றி செய்தி வெளியிடலாமா? என்று உறுதிப்படுத்திய பின் நான் செல்கிறேன்.

இரா.சுகுமாரன் said...

//Anonymous said...

எப்படியோ நமக்கு ஒரு தமிழ் ஸ்பீல்பெர்க் கிடச்சிட்டாருப்பா....இன்னாமா திரைக்கதஎல்லாம் எழுதறாரு ....சுகுமார்கண்ணா என்கண்ணே பட்டுடும் போலிருக்கு...உங்கம்மாவ சுத்திபோட சொல்லு சாமி//


இலங்கை பிரச்சனை பற்றி இரண்டு வகையான நடவடிக்கைகள் தமிழகத்தில் உள்ளது.

ஒன்று : தமிழகத்தில் நின்று கத்திக்கொண்டிருப்பது.
இதைத்தான் இங்குள்ள அரசியல் கட்சிகள் செய்கின்றன. இதனால் பெரிய பலன் ஒன்றும் கிட்டவில்லை. இப்படிப் பட்டவர்களை இவர்கள் அதிகம் தொடர்பு கொள்வதில்லை. இவர்களை இந்திய அரசு அல்லது தமிழக அரசே கவனித்துக் கொள்கிறது.

தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், இங்கு பேசினால் கூட கைது செய்கிறார்கள்.

இரண்டு : சர்வதேச அளவில் சட்டரீதியான பணிகளை மேற்கொள்வது, சர்வதேச சட்டப்படி நடவடிக்க எடுக்க வலியுறுத்துவது. பலருக்கு கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது இதன் படி நடவடிக்கை கோருவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்.

ஐக்கிய நாடுகளின் சட்டப்படியான முறைகளில் அல்லது அதன் நடைமுறைகள் செயல் படாத் தன்மைகள் ஆகியவற்றைப் பற்றி பல்வேறு நாடுகளுக்கு மின்னஞ்சல்களை தொடர்ச்சியாக அனுப்பினால் ஐநா கேள்விக்குள்ளாகிறது. இலங்கையின் ஆதரவு நாடான சீனா, இரசியா ஆகியவைகளுக்கு எழும் எதிர் கருத்துக்களை முறியடிக்க இத்தகைய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகிறது.

முதலில் இப்படிப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை சரிபட்டு வந்தால் இந்த வேலைகளை நிறுத்த இலங்கை தூதரகம் மூலம் காசு கொடுக்கிறார்கள். அதற்கான வேலைகள் இங்கு நடைபெறுகிறது.

இது போன்ற செயல்களை பத்திரிகைகள் ஏதும் எழுதவில்லை எனவே இது பொய் என்று உங்களை போன்றவர்கள் சொன்னால் அதற்கு நான் ஒன்று செய்ய முடியாது.

நீங்கள் விரும்பினால் அதற்கான ஆதாரமும் உங்களுக்கு நான் வழங்கத் தயாராக இருக்கிறேன்.

யூர்கன் க்ருகியர் said...

Do not feel ..let us deal....