Saturday, May 13, 2006

மார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகுதி-2

மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா?

இப்படிக்கேட்டால் அல்ல என எளிதில் சொல்லி விடுகிறார்கள் சில வலைப்பதிவர்கள்.

மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா? என விவாதம் தொடங்கியதால் “மார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும்“ என்ற பெயரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்த விவாதம் இன்னும் முற்று பெற்றதாக தெரியவில்லை.

இது பற்றிய முந்தைய விவாதங்களான மார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும் பார்த்து விட்டு இந்த பகுதியை தொடர்ந்தால் அதன் முழுமை தங்களுக்கு விளங்கும்.

இந்த விவாதங்களுக்கு பதிலை எழுத வேண்டும் என்று நான் முனைந்த நேரத்தில் “ திண்ணை“ இணைய தளத்தில் ஏற்கனவே இதற்கான விவாதம் உள்ளதால் புதிதாக பதில் எழுதத் தேவையில்லை. என்று நான் முடிவுக்கு வந்துள்ளேன்.

கார்ல் பாப்பரின் விவாதத்தை ஒரு வெங்காயம் என்று அந்த வலைத்தளம் விவரித்துள்ளது. அதன் விவாதங்களை திண்ணை“ இணைய தளத்தில் சோதிப் பிரகாசம் என்பவர் எழுதியுள்ளார்.

கார்ல் பாப்பரின் விவாதக் கேள்விகள் முதலில் இங்கு தருகிறேன்.
விஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை -

கார்ல் பொப்பர் Science as Falsification by Karl R. Popper

ஐன்ஸ்டானின் தேற்றம் மிகவும் வித்தியாசமானது. உதாரணமாக ஐன்ஸ்டான் கணித்ததும், எட்டிங்டன் நிரூபித்ததையும் எடுத்துக்கொள்ளுங்கள். பெரும் எடையுள்ள பொருட்கள் (உதாரணமாக சூரியன்), எடையுள்ள பொருட்களை ஈர்ப்பது போலவே, ஒளியையும் ஈர்க்கும் என்று அவரது புவியீர்ப்பு சக்தி பற்றிய பொதுத்தேற்றம் கணித்தது. இதன் அடிப்படையில் தொலைதூரத்திலிருக்கும் ஒரு நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி சூரியனுக்கு அருகில் வரும்போது அதன் ஈர்ப்பு சக்தியால் தன் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து விலகி வரும் என்றும் அதன் அளவு எவ்வளவு இருக்கும் என்பதையும் கணிக்க இயலும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சூரியனுக்கு நேர் பின்னே இருக்கக்கூடிய ஒரு நட்சத்திரம் சற்று நகர்ந்து இருப்பது போல காணப்படும் என்று சொல்லலாம். சூரியனின் ஏராளமான ஒளி இருக்கும் போது அவ்வாறு ஒரு நட்சத்திரம் 'நகர்ந்து ' இருப்பது தெரியாது. ஆனால், சூரிய கிரகணத்தின் போது எடுக்கும் ஒளிப்படத்தின் மூலம் அதனைக் காணலாம். அதே இடத்தை இரவில் எடுத்து நட்சத்திரங்கள் எந்த அளவு நகர்ந்து இருக்கின்றன என்பதை வைத்து, கணிக்கப்பட்ட அளவையும் சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட நட்சத்திரத்தின் இட நகர்வின் அளவையும் ஒப்பிட்டு சரி பார்க்கலாம்.

இந்த இடத்தில் மிகவும் ஆச்சரியப்படத்தகுந்த விஷயம் இப்படிப்பட்ட கணிப்பை வெளியிடுவதற்கான தைரியமும் துணிவும். கணிக்கப்பட்ட விளைவு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இல்லை என்றால், அந்த தேற்றம் சுத்தமாக மறுதலிக்கப்பட்டது, தவறென்று நிரூபிக்கப்பட்டது. பரிசோதனையில் காணப்படக்கூடிய விஷயங்களும் தேற்றத்தில் கிடைக்கும் விஷயங்களும் பொருத்தமற்றவையாக இருந்தால், ... check and translate ...

1919-20 ஆண்டு குளிர்காலத்தின் போது, நான் அடைந்த முடிவுகளை கீழ்வருமாறு எழுதுகிறேன்

1. It is easy to obtain confirmations, or verifications, for nearly every theory - if we look for confirmations.

1. நாம் ஒரு தேற்றத்தின் நிரூபணங்களை மட்டுமே தேடிச்சென்றால், எப்படிப்பட்ட ஒரு தேற்றத்துக்கும் நிரூபணங்களைக் கண்டறிவது எளியது.

2. Confirmations should count only if they are the result of risky predictions; that is to say, if, unenlightened by the theory in question, we should have expected an event which was incompatible with the theory - an event which would have refuted the theory.

2. நிரூபணங்களை எப்போது நிச்சயமாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால், அவை மிகவும் துணிச்சலான தைரியமான கணிப்புகளாக இருந்தால் மட்டுமே. அதாவது சாதாரணமாக பொதுப்புத்தியில் ஒரு தேற்றம் சொல்வதற்கு நேர்மாறான ஒரு விஷயத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும்,அந்த தேற்றம் பொய்யென ஆக்கப்பட்டுவிடக்கூடிய நிகழ்வை நோக்கி

3. Every 'good ' scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is.

3. எந்த ஒரு அறிவியல் தேற்றமும் இது நடக்ககூடாது என்பதில் தெளிவாக உள்ளது. இது ஒரு சில விஷயங்கள் நடப்பதை 'தடை ' செய்கிறது. (அதாவது இந்த இந்த விஷயங்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடக்காது என்று கூறுகிறது) எவ்வளவு அதிகமாக தடை செய்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. ( அதாவது அந்தத் தேற்றத்தின் படி எதெல்லாம் நடக்காது என்பதை உறுதி செய்கிறதோ, அந்த அளவு அது சிறந்த தேற்றம் ஆகும்.)

4. A theory which is not refutable by any conceivable event is non-scientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice.

4. எந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்க முடியாதோ, அது அறிவியல் தேற்றம் அல்ல. பொய்யென நிரூபிக்க முடியாதது ஒரு தேற்றத்தின் நல்ல குணாம்சம் அல்ல, அது தீய குணாம்சம்.

5. Every genuine test of a theory is an attempt to falsify it, or to refute it. Testability is falsifiability; but there are degrees of testability: some theories are more testable, more exposed to refutation, than others; they take, as it were, greater risks.

5. தேற்றத்தின் உண்மையான பரிசோதனை அந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்கும் முயற்சி, அல்லது அதனை தவறு என்று காட்டும் முயற்சியே. ஒரு தேற்றத்தை பரிசோதனை செய்யும் குணம் அதனை பொய்யென நிரூபிக்க முயலும் குணாம்சம். சில தேற்றங்கள், மற்ற தேற்றங்களை விட, பொய்யென நிரூபிக்க எளிதானவை.

6. Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory. (I now speak in such cases of 'corroborating evidence. ')

6. ஒரு தேற்றத்தை நிரூபிக்கும் தடயங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அவை அந்த தேற்றத்தை உண்மையிலேயே பரிசோதனை செய்யும் தடயங்களாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை எடுத்துக்கொள்ளப் படவேண்டும். இப்போது, அவை இந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்கும் முயற்சியின் தோல்வியாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

7. Some genuinely testable theories, when found to be false, are still upheld by their admirers - for example by introducing ad hoc some auxiliary assumption, or by reinterpreting the theory ad hoc in such a way that it escapes refutation. Such a procedure is always possible, but it rescues the theory from refutation only at the price of destroying, or at least lowering, its scientific status. (I later described such a rescuing operation as a 'conventionalist twist ' or a 'conventionalist stratagem. ')

7. சில பரிசோதனை செய்யத்தக்க தேற்றங்கள், பொய்யென காணப்படும்போது, அந்த தேற்றத்தின் ஆதரவாளர்களால் அதனை தூக்கிப்பிடிப்பது நடக்கிறது. உதாரணமாக, இன்னும் சில உபரி அனுமானங்களை அதில் நுழைத்து, அல்லது அதனை மறுப்பதற்கான வழிகளை அடைத்துவிடும் வழியில் அதனை மறு வாசிப்புக்கு உட்படுத்துவது ஆகிய முறைகளில் இது நடக்கலாம். இப்படிப்பட்ட முறைகள் சாத்தியமென்றாலும், அது ஒரு தேற்றத்தை பொய்யென காட்டுவதிலிருந்து தப்பிக்க வைப்பது பெரும்பாலும் அந்த தேற்றத்தை அழிப்பதிலேயே முடிகிறது. அல்லது அந்த தேற்றத்தை அறிவியல் தேற்றம் என்ற இடத்திலிருந்து இறக்குவதிலேயே நடக்கிறது.
One can sum up all this by saying that the criterion of the scientific status of a theory is its falsifiability, or refutability, or testability.

மேற்கண்டவைகளிலிருந்து சுருக்கிச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு தேற்றத்தை அறிவியற்பூர்வமானது என்று சொல்லவேண்டுமென்றால், அதனை பொய்யென காட்டுவதற்கான சாத்தியம் இருக்க வேண்டும். அதாவது அதைச் சோதனைக்குட் படுத்தக்கூடிய சாத்தியம், அதை மறுக்கக் கூடிய சாத்தியம் இருக்க வேண்டும்.

2. இதைச் சில உதாரணங்களால் விளக்கலாம். ஐன்ஸ்டானின் புவி ஈர்ப்புக் கொள்கை தவறன நிரூபிக்கக் கூடிய சாத்தியத்தை உள்ளடக்கி இருந்தது. நம் அளவுகோல்கள் முழுமையாய் அந்தக் கோட்பாட்டை நிரூபிக்கப் போதாதவையாய் இருந்தபோதிலும், அந்தக் கோட்பாட்டை தவறென்று நிரூபிக்கும் சாத்தியம் இருந்தது.

சோதிடம் இந்த சோதனையைப் பூர்த்தி செய்ய இயலாது. சோதிடர்கள் தம்முடைய நிரூபணங்களில் மூழ்கிப் போய் , திசை தவறியதால், தவறெனக் காட்டும் நிரூபணங்களில் சிரத்தை கொள்வதில்லை. தம்முடைய புரிதல்களையும், ஆருடங்களையும் மிக மேம்போக்காகவும், குறிப்பானதல்லாமல் முன்வைத்ததனால், தவறென நிரூபணம் வருகையில், அதை விளக்கலாயினர். தவறென நிரூபணம் ஆவதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள தேற்றங்களை தவறென நிரூபிப்பதற்கான அடிப்படையை இல்லாமல் செய்து , தெளிவற்று இயங்குகின்றனர். இப்படி தெளிவற்ற நிலையில், நிரூபணங்கள் சுலபம் ஆகிவிடுகின்றன.

நான் தவறென நிரூபிக்கும் சாத்தியக் கூறு பற்றிப் பேசியது, அர்த்தமுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்தது உண்மை , ஒப்புக்கொள்ளத்தக்கது இவை பற்றியதல்ல. எந்த வாசகங்கள் அல்லது கோட்பாடுகள் விஞ்ஞான பூர்வமானது, எவை விஞ்ஞான பூர்வமற்றது என்பதைப் பற்றியது. எங்கே இவை இரண்டிற்கும் இடையே பகுப்புக் கோடு இடுவது என்பது பற்றியது. எது விஞ்ஞானக் கோட்பாடு, எது போலி விஞ்ஞானம், அப்பாலைத் தத்துவம், மதத்தத்துவம் என்பது பற்றியது. 1928-1929 வாக்கில் இதை நான் 'பகுத்துக் காண்பதில் உள்ள பிரசினை ' (problem of demarcation) என்று இதைக் குறிப்பிடலானேன். தவறென நிரூபிக்கும் தன்மையை நான் விஞ்ஞானக்கோட்பாடுகளுக்கு ஒரு உரைகல் என்பேன்.
http://www.freethought-web.org/ctrl/popper_falsification.html

இதற்கான பதில் வழங்கும் திண்ணை இணைய தளத்திலிருந்து சில செய்திகளை மட்டும் அப்படியே இங்கு எடுத்து வெளியிடுகிறேன்.

கார்ல் பாப்பரின் வெங்காயம்

முற்கூற்றுகளின் நிருபணம்
சோதிப் பிரகாசம்

மகளுக்கு மணம் செய்து வைப்பது பெற்றவர்களின் கடமை மட்டும் அல்ல, தங்கள் சுமையினை அவர்கள் குறைத்துக் கொள்ளுகின்ற ஒரு வழியும் ஆகும். தங்கள் மகள்களின் திரு மணத்தினைப் பற்றி இப்படித்தான் நம் ஊர்ப் பெற்றோர்கள் நினைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாகத் தங்கள் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டு வருகின்ற அவர்கள், கோளியக் காரர்களையும் அணுகுகிறார்கள். வருகின்ற தை மாதத்தில் அவர்களின் மகளுக்குத் திரு மணம் நடந்தே தீரும் என்று கோளியக் காரர்களோ வருவது-உரைக்கிறார்கள்.

கோளியர்களது முற்கூற்றின் படியே அவர்கள்தம் மகளுக்குத் திரு மணம் நடந்து விடுகிறது என்று நாம் வைத்துக் கொள்வோம்.
கார்ல் பாப்பருக்கு உடனே கோவம் வந்து விடுகிறது; தங்கள் முற்கூற்றுகளைப் பரி சோதித்துப் பார்க்கின்ற இயன்மையினை அவர்கள் அழித்து விட்டார்கள் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அவர்களை அவர் பழிக்கிறார்; நம் ஊர்ப் 'பகுத்தறிவுப் பகலவர்களும் ' அவருக்குக் கை தட்டுகிறார்கள்.

இங்கே, என்னத்தை அழித்து விட்டார்கள் கோளியர்கள் ? அழிப்பதற்கு அப்படி இதில் என்ன இருக்கிறது ?

ஒன்றும் புரிய வில்லை நமக்கு!

இப் பொழுது, கோளியக் காரர்களின் கணிப்பின் படி நமது பெற்றோர்களின் மகளுக்குத் திருமணம் நடை பெறாமல் போய் விடுகிறது என்று நாம் வைத்துக் கொள்வோம்.

கார்ல் பாப்பரின் மறு-வினை எப்படி இருந்திடக் கூடும் என்று நாம் எதிர் பார்ப்போம் ?

கார்ல் பாப்பர் மகிழ்ச்சி அடைவார் என்றுதானே! கோளியக் காரர்களை அவர் பழித்துத் தள்ளி விடுவார் என்றுதானே!

ஆனால், அதுதான் இல்லை!

கார்ல் பாப்பர் மகிழ்ச்சி அடைவார் என்பது உண்மைதான்; ஆனால், அவர்களை அவர் பழித்திட மாட்டார்; மாறாக, உண்மையான விஞ்ஞானிகள் என்று அவர்களை அவர் பாராட்டுவார்----

4. A theory which is not refutable by any conceivable event is non-scientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice என்று!
அதாவது, a theory is scientific only if it is refutable (and is refuted!) என்று!

பிழையாக்கப் படுகின்ற பொழுதுதான், விஞ்ஞான முறையான ஒரு தேற்றத்தின் பாற் பட்டதாக, ஒரு முற் கூற்றினை நாம் கருதிட வேண்டும் என்றால், பலிக்காமல் போய் விட்ட காரணத்தினால்தான், நமது கோளியக் காரரின் கணிப்பு நிருபிக்கப் பட்டு இருக்கிறது என்று இங்கே பொருள் ஆகி விட வில்லையா ?

ஆனால், இப்படியே போனால் நமது கோளியக் காரர்களின் தொழில் படுத்து விடும் என்பதுதான் உண்மை. எனினும், அவர்களது நோக்கம் நிறைவேறி விட்டது; தங்கள் கட்டணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டும் விட்டார்கள்.
அதே நேரத்தில், இவ் அளவு எளிமையாகக் கார்ல் பாப்பரை நாம் புரிந்து கொள்ள முடியாது என்பதில் ஐயம் இல்லை. ஏனென்றால், அவர் கூறிடத் தவற வில்லை----If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted என்று! அதாவது, ஒரு தேற்றத்தினால் முற்கூறப் பட்ட விளைவு ஏற்பட்டிட வில்லை என்கின்ற பொழுதுதான், அத் தேற்றம் பிழை படுத்தப் பட்டு நிற்கிறது என்று!

கார்ல் பாப்பரின் சிக்கல்

A theory which is not refutable by any conceivable event is non-scientific என்று கூறுகின்ற கார்ல் பாப்பர், If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted என்றும் கூறுகிறாரே, ஏன் ?

அதாவது, a theory is scientic only if it is refutable என்று கூறுகின்ற கார்ல் பாப்பர், a theory is proved only when the event predicted by it takes place என்றும் கூறுகிறாரே, ஏன் ?

ஒன்றில், 'பிழையாக்கப் பட முடியாத எந்த ஒரு தேற்றமும் விஞ்ஞான முறையானது அல்ல ' என்னும் தமது கூற்றில் நிலைத்து அவர் நின்றிட வேண்டும்; அல்லது, 'பிழையாக்கப் பட முடியாத ஒரு தேற்றம்தான் விஞ்ஞான முறையானது ' என்று அடித்துக் கூறுவதற்கு அவர் முன் வந்திட வேண்டும்.

அதை விட்டு விட்டு, ஓர் இரண்டும்-கெட்டான் கொள்கையாக தமது முடிவுகளை அவர் எடுத்து வைப்பது என்ன ஞாயம் ?
ஏனென்றால், பிழையாக்கப் பட்டு நிற்கின்ற ஒரு தேற்றம்----விஞ்ஞான முறை 'ஆனதா ? ' அல்லது 'விஞ்ஞான முறை அற்றதா ? ' என்பதுதான் மையமான கேள்வி.

ஒரு வேளை, 'பிழையாக்கம் ' என்பது வேறு; 'பிழையாக்கும் இயன்மை ' என்பது வேறு; என்று அவர் கருதுகிறாரோ ? அல்லது, 'தேற்றம் ' என்பதையும் அதன் அடிப்படையில் கணிக்கப் படுகின்ற 'முற்கூற்று ' என்பதனையும் ஒன்றாகப் போட்டு அவர் குழப்பிக் கொள்கிறாரோ ?

ஒரு தேற்றத்திற்குள், அதனைப் பிழையாக்கிக் காட்டிடக் கூடிய இயன்மை அடங்கி இருக்கும் என்றால், அந்த இயன்மையினைப் பயன்படுத்தி அதனை நாம் பிழை ஆக்கிக் காட்டுகின்ற பொழுது, அந்தத் தேற்றத்தின் தன்மையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டு விடுவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை. எனவே, இந்தக் கோணத்தில் கார்ல் பாப்பரை நாம் அணுகுவதற்கும் வாய்ப்பு இல்லை.

ஆனால், மறு வேளை, although a theory may be proved by the happening of the event predicted by it, it is still not scientific for, to be a scientific theory, it must be refutable at every point of time என்று கூறுவதற்குதான்----ஒரு தேற்றம் முற்கூறுகின்ற ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்து முடிந்து விடுவதால் மட்டும், விஞ்ஞான முறையான ஒரு தேற்றமாக அது திகழ்ந்து விட முடியாது; ஏனென்றால், எந்தக் கணத்திலும் பிழையாக்கிடப் படக் கூடிய ஒரு தேற்றம் மட்டும்தான், விஞ்ஞான முறையான ஒரு தேற்றமாக விளங்கிட முடியும் என்று கூறுவதற்குதான்----கார்ல் பாப்பர் முற்படுகிறாரோ ?

அப்படித்தான் என்றால் கூட, புதுமை என்று சொல்வதற்கு இதில் எதுவும் இல்லை---- புதிய பார்வையும் இல்லை; புதிய முயற்சியும் இல்லை!
முதலில், 'முற் கூற்று ' என்பதன் முந்திய கட்டங்களைக் கொஞ்சம் நாம் எண்ணிப் பார்ப்போம்.

தேற்றம்-கணிப்பு-முற்கூற்று

முற்கூற்று என்பது ஒரு தேற்றம் அல்ல; ஒரு தேற்றத்தின் அடிப்படையில் கணித்துக் கூறப் படுகின்ற ஒரு முன்-மொழிவு மட்டும்தான் ஆகும்.
எனவே, ஒரு 'முற்கூற்று ' பிழை பட்டுப் போய் விட்டது என்பதற்காக, அந்தத் 'தேற்றமும் ' பிழை பட்டுப் போய் விட்டது என்று நாம் கூறி விட முடியாது. ஏனென்றால், பிழை பட்டு நிற்பது வெறும் 'கணிப்பு ' மட்டும்தான் ஆகும்.
இப்படி, தேற்றம்----கணிப்பு----முற்கூற்று என்பதுதான் 'கணிப்பு நிகழ்ப்பாட்டின் ' ஆதியும் அந்தமும் என்பதில் ஐயம் இல்லை.

இங்கே, ஒரு சில முற்கூற்றுகளை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஐன்ஸ்ட்டின்: ந்யூட்டன்

With Einstein 's theory the situation was strikingly different. Take one typical instance - Einstein 's prediction, just then confirmed by the finding of Eddington 's expedition. Einstein 's gravitational theory had led to the result that light must be attracted by heavy bodies (such as the sun), precisely as material bodies were attracted. As a consequence it could be calculated that light from a distant fixed star whose apparent position was close to the sun would reach the earth from such a direction that the star would seem to be slightly shifted away from the sun; or, in other words, that stars close to the sun would look as if they had moved a little away from the sun, and from one another. This is a thing which cannot normally be observed since such stars are rendered invisible in daytime by the sun 's overwhelming brightness; but during an eclipse it is possible to take photographs of them. If the same constellation is photographed at night one can measure the distance on the two photographs, and check the predicted effect.
கார்ல் பாப்பரின் கூற்று இது!

பருமையான உடலங்களைக் கனமான உடலங்கள் ஈர்ப்பது போலவே, அவற்றால் ஒளியும் ஈர்க்கப் படுகிறது என்பது ஐன்ஸ்ட்டானின் புவியீர்ப்புத் தேற்றமாம்! இதன் விளைவாக, சூரியனுக்கு அண்மையில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வருகின்ற ஒளி, பூமியை அடைகின்ற பொழுது, அந்த நட்சத்திரம் கொஞ்சம் இடம் மாறி இருப்பதாக நமக்குத் தோன்றுமாம்! இந்தக் காட்சியை இருளில் படம் பிடித்துப் பார்த்து, இதனை நாம் தெரிந்து கொள்ளவும் முடியுமாம்! எடிங்க்ட்டனது பரிபயணத்தினால் ஒப்புறுதிப் படுத்தப் பட்டும் இது உள்ளதாம்!

"திண்ணை“ இணைய தளத்தில் சோதிப் பிரகாசம் அவர்களின் விவாதங்களின் நான்கு பகுதிகளுக்கு மட்டும் இங்கு இணைப்பு சொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் விவாதங்களை காண விரும்புவோர் இணைப்புகளை சொடுக்கவும்.

தொடரும்..............

4 comments:

சீனு said...

உங்கள் வேலையை சுலபமாக்கியிருக்கிறது திண்ணை இணைய தளம்.

பொறுமையாக படித்துவிட்டு வருகிறேன்.நிறைய செய்திகளை விவாதித்து இருக்கிறார் செயப்பிரகாசம் அவர்கள்.

நன்றி!

Anonymous said...

The translation published in Thinnai is just a part of his work.
The response in Thinnai had been
based on what was published.How can one refute or accept Popper's views unless one reads and understands his book.This fundamental question cannot be
ignored by giving link to some
URLs.Jothipragasam does not
understand a thing in philosophy
of science.Poppers The Poverty
of Historicism is also a critique
of Marxism.So understand one thing-
there has been no debate worth the
name in Thinnai.

Anonymous said...

Splendidly done is richer reconsider than spectacularly said.

Anonymous said...

A human beings begins cutting his wisdom teeth the initially time he bites out more than he can chew.