Friday, May 05, 2006

மார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும்

மேதினம் தொடர்பான பதிவுகளில் மார்க்சியம் குறித்து பல்வேறு தகவல்களை வலைப்பதிவர்கள் எழதியுள்ளனர் அத்துடன் விவாதமாக சிலர் மார்க்சியத்தை கேள்வி எழுப்பியுள்ளனர். அவற்றில்

முத்து( தமிழினி)யின்
1. மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள்
2.வங்கி அனுபவம்-கூடமலை கோபால்
வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு
3.மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா?
செல்வத்தின்
4.மார்க்ஸும் காந்தியும்
சசியின் டைரி
5.கம்யுனிச காதல் - 1

ஆகியவை நான் பார்த்தவைகள்

இதில் முத்து( தமிழினி) தன்னுடைய
மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள் என்ற பதிவில் என்னுடைய பதில்களுக்கு

//என்னுடைய எழுத்தின் பலம் பலவீனம் எல்லாமே எளிமைதான். என் அறியாமையை ஒத்துக்கொள்வது தான்//. என்றும் நேரில் வேண்டுமானால் விளக்க முடியும் என்று கூறி இருக்கிறார்.

அத்துடன் அப்பதிவில் குழலிக்கு எழுதிய பதிலில்,

//thanks kuzhali.
சிந்தாந்த ரீதியாக பார்த்தால் என்னிடமும் அதிகம் படிப்பு இல்லை.//

என்று இந்த விவாதத்திலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் சங்கர் நாராயணன் மட்டும் மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா? என்று கேட்டுள்ளார் எனவே அவரின் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கும் விதமாக இப்பதிவை வழங்குகிறேன்.

1. மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா?

இந்த தலைப்பே சரியானதல்ல, மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா? என்றுதான் இருக்க வேண்டும்.

மார்க்சின் வாதம் அறிவியல் பூர்வமானதா எனக் கேட்பதாக தெரியவில்லை. அவர் கேள்விகளில் எங்கும், மார்க்சின் எந்த விசயத்தையாவது சொல்லி அது அறிவியல் பூர்வமானதா என்று வினவவில்லை.

எனவே இந்த வலைப்பதிவர் மார்க்சிய அடிப்படை இல்லாமல் மார்க்சியத்தை பற்றி பேசுபவர் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.

மார்க்சியத்தை கேள்விக்குள்ளாக்கு முன் அதை நன்றாக படித்துவிட்டு வருவது தான் ஆரோக்கியமான விவாதமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

2. //அறிவியல் அடிப்படை கொண்டது மார்க்ஸியம் என்பது நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.//

மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். இந்த சமூக விஞ்ஞானம் அறிவியல் அடிப்படை கொண்டது என்பது உண்மை.

அறிவியல் என்பது, நன்றாக நோக்கினால் (அறிவு+இயல்) அறிவைப் பற்றிய தத்துவம். சமூகத்தை, அதன் செயல்பாடுகளை, பிரச்சனைகளை அறிவியல் நோக்கில் நோக்குவதால் அது அறிவியல் அடிப்படை கொண்டது என்கிறார்கள்.

3. //பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது, சோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்ஸியத்தின் தவறுகளைக் காட்டிவிட்ட நிலையில். அதை இன்னமும், ஒரு அறிவியல் கண்ணோட்டம் என்று சப்பை கட்டுவது எந்த விதத்திலும் அதை அறிவியலாக்கிவிடாது.//

பெர்லின் சுவர் தகர்ந்து விட்டால் சுவர் தான் தகர்ந்தது. தத்துவம் தகரவில்லை. அந்த சுவர் தான் மார்க்சியம் என்று யார் உங்களுக்கு சொன்னது?

சோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்சியத்தின் தவறுகளைக் காட்டவில்லை. மார்க்சியம் நடைமுறைப்படுத்தியதில் உள்ள தவறைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

வரலாற்று நிகழ்வை, வரலாற்று நிகழ்வு என்றுதான் சொல்கிறோம். வரலாற்றுத் தகர்வு என்று சொல்வதில்லை.

உங்களைப்போன்றோர் சப்பைக்கட்டு கட்டுவதால் ஒரு சமூக விஞஞானத்தை வென்று விடமுடியாது.

4. போதாத குறைக்கு, க்யூபா போன்ற நாடுகள், மார்க்ஸ்வாததினால் இன்னமும் முன்னேராமல் இருப்பது உலகறிந்த உண்மை. (அதற்கு காரணம் அமேரிக்கா என்று நமது மார்க்ஸ்வாதிகள் சொல்வது சகிக்கமுடியவில்லை. மார்க்ஸ்வாததின் இன்றய எதிரி அமேரிக்கா, உலகில் உள்ள எல்லா தீமைகளுக்கும் காரணம் அமேரிக்கா)

கியூபாமீது அமெரிக்கா மிக நீண்ட நாட்களாக பொருளாதாரத்தடை விதித்து அதன் முன்னேற்றத்திற்கு இன்றுவரை தடையாகவே உள்ளது.

அமெரிக்க சி.ஐ.ஏ போன்ற சமூக விரோதிகளைப்பற்றி மட்டும் பேசக்கூடாது என்கிறீர்கள். அவர்களை பற்றி பேசாமல் எப்படி விளக்குவது,

தோழர் தோழர் என்று சொல்லிக் கொண்டு லெனின் கூடவே கடைசிவரை ஒரு சி. ஐ. ஏ இருந்தான் என்று கருணாநிதி ஒருமுறை சொன்னார்.

கடைசிவரை இப்படி கூட இருந்து குழிபறிப்பது உள்ளிட்ட செயலை, அவர்கள் செய்த சதிவேலைகளைப் பற்றி பேசாமல் எப்படி விளக்குவது.

சுப்ரமணியசாமி சென்ற வாஜ்பாயின் பா.ஜ.க அரசை 13 மாதத்தில் கவிழ்த்தார். செயாவிற்கு டீ பார்ட்டி டெல்லியில் வைத்தார். கவிழ்த்தார். ஆனால் கவிழ்த்த சுப்பரமணியசாமி பற்றி பேசவேண்டாம் என்றால் எதை பேசுவது.

ஆட்சிக்கவிழ்த்த சுப்ரமணியசாமி பற்றிமட்டும் பேசாதே ஆட்சிகவிழ்ப்பைபற்றி பேசு என்பது போல் உள்ளது உங்கள் வாதம்.

5. அது சரி, இன்னும் எத்தனை நாடுகளில் தான் பரிசோதிக்கவேண்டும் என்கிறீர்கள்.? உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரிசோதித்து தோற்றால் தான் ஒத்துக் கொள்வீர்களா?

மார்க்சியம் தோற்றது என்றால் முதலாளித்துவம் அனைத்து சமூகப்பிரச்சனைகளையும் தீர்த்து வெற்றி பெற்றதா?

சோவியத் யூனியன் மிகச்சிறிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்தது. வின்வெளியில் நீல் அம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் செல்வதற்கு முன்பாகவே யூரிகாகரினை வின்வெளிக்கு அனுப்பி எல்லாவற்றுக்கும் முன்னோடியாகவே இருந்தது.

போர் வெறிபிடித்த அமெரிக்காதான் ஹீரோசிமா, நாகசாகியில் குண்டுவீசியது.


6. //ஒரு சித்தாந்தம் அல்லது theory அறிவியல்பூர்வமானதாக இருக்க Falsifiability மிக முக்கியம், மார்க்ஸ்வாதம் falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா?//

Falsifiable என்பதற்கு பால்ஸ் மின் அகராதியில் கீழ்க்குறித்தவாறு விளக்கம் உள்ளது.

falsifiable, a. —falsify, v. alter fraudulently, மாற்றி மோசடி செய்; disappoint, ஏமாற்றம் விளைவி; forge, கள்ளப் பத்திரம் உருவாக்கு; distort truth, உண்மையைத் திரித்துக் கூறு; prove to be wrong, தவறென்று நிரூபி; falsification, n. ஏமாற்றுதல்; பொய்க் கூற்று; மோசடி செய்தல்; —falsifier, n.

உங்கள் விவாதத்தை வேண்டுமானால் அப்படி ஏற்றுக்கொள்ளலாம்.

ஒரு சித்தாந்தம் அறிவியல்பூர்வமானதாக இருக்க,
7. அந்த சித்தாந்தத்தின் confirmation ஐ மட்டுமே பார்பது தவறு. அத்தகய verification/confirmation எந்த விதமான theoryக்கும் சுலபமாக கிடைத்துவிடும்.
8. //என்னை பொருத்தவரை, அறிவியல் அடிப்படை என்பது தவறு என்றும் சரி என்றும் நிரூபிக்கப்படக் கூடியதாக இருக்கவேண்டும் (Falsifiablity).//

மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம் ஆனால், நீங்கள் அதனை ஒரு பொருள் போன்று கருதுகிறீர்கள்.

தண்ணீர் அதை சூடாக்கினால் அது ஆவியாகி H2 + O ஆக மாறும், அதை மீண்டும் அதிக அழுத்ததிற்கு உட்படுத்தி திறந்து விட்டு தண்ணீராக மாற்றலாம் (லிண்டே பிராசஸ்).

ஒரு பொருளைப்போல சமூகத்தை, சமூக விஞ்ஞானத்தை உடனடியாக அப்படி சோதித்து அறிய இயாலாது.

சமூக விஞ்ஞானத்தை ஒரு test tube விஞ்ஞானமாக பார்த்தல் என்பது கீழ்க்கண்ட கேள்வி போலத்தான்.

பலர் இப்படி ஒரு கேள்வி எழுப்புவார்கள், முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? எனக் கேட்பார்கள் மேலோட்டமாகப் பார்த்தால் அது சரியானது போல் தோன்றும்.

ஆனால்,
அந்த கேள்வியே அடிப்படையில் தவறானது.

எதுவும் நேரடியாக வரவில்லை. பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட மாற்றங்களினால் மாறியவை. ( இதை கேள்விக் குள்ளாக்கினால் டார்வின் கொள்கைப் பற்றிதான் பேச வேண்டியிருக்கும்).

9. அந்த சித்தாந்தத்தை உடைத்தெரியக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை நாம் எதிர்பார்க்கவேண்டும்.

சித்தாந்தத்தை உடைத்தெரியக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், இன்றைய உலகத்தில் உயிர்கள் தோன்றிய வரலாறு பற்றி மார்க்சு பின்வறுமாறு குறிப்பிட்டார்.

இன்றைய உலகில் டார்வின் கொள்கைதான் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனை அவர் நிறுவியிருக்கிறார். அதை மீறிய மறுக்கிற தத்துவம் உலகில் இதுவரை இல்லை. எனவே, உலகத்தில் உயிர்கள் தோன்றியவை பற்றி டார்வின் கொள்கையையே அடிப்படையாய் கொள்ள வேண்டியுள்ளது. எனவே அதுதான் உயிர்கள் தோன்றியது பற்றிய இன்றைய அறிவியல்.

10. ஒரு theory யை தவறு என்று நிரூபிக்க முடியாது என்றால் அந்த நொடியே அந்த theory அறிவியல் பூர்வமானது அல்ல என்ற நிலையய் அடைகிறது. Irrefutability is not a virtue of a theory but a vice.

உண்மையான விசயத்தை பொய் என்று நிருபிக்க இயலாது என்றால் அது அறிவியல் பூர்வமானது அல்ல.

நல்ல கண்டுபிடிப்பு.

உண்மையான அறிவியல் என்றால், உண்மையை பொய் என்றும், பொய்யை உண்மை என்றும் நிருபித்தலே ஆகும்.

ஆகா! அருமையான தத்துவம்.

11. Theory யை உண்மையான முறையில் சோதனை செய்வது என்பது, அந்த தியரியை தவறு என்று நிரூபிக்கும் பொருட்டு எடுத்துக் கொள்ளும் உண்மையான முயற்சியே. அந்த Theory யை சரி என் நிரூபிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி அல்ல.

உங்கள் முயற்சி வீண் ஏனெனில், நான் இன்று உங்களுக்கு பதில் எழுத வேண்டும் என்பதற்காக என்னிடம் உள்ள 1000 திற்கும் மேற்பட்ட நூல்களில் முன்னேற்றப் பதிப்பகத்தின் 250 க்கும் மேற்பட்ட நூல்களை ஒரு பார்வை கூட பார்க்க இயல்வில்லை. இதை படிக்கவே ஒரு ஆறு வருடம் ஆகும் போல் உள்ளது.

தவறு என்று நிரூபிக்க இந்த வலைப்பதிவில் 4-வரி எழுதிவிட்டு அந்த தத்துவத்தை தவறு என்று நீரூபிக்கும் முயற்சியை இத்துடன் கைவிடுவது நல்லது.

12. ஒரு சில Theory க்கள் தவறு என்று நிரூபணமான பின்பும் அதன் சார்புடயவர்கள் அத்தகய சித்தாந்தத்தை விடாப்பிடியாகக் கடைபிடிப்பதும், பழய சிந்தனைகளுக்குப் புதிய அர்த்தங்கள் கற்பிப்பதுமாக பல "Conventionalist twist" கொடுத்து theory யைக் காப்பற்ற முயற்சிகின்றனர்.அத்தகய முயற்சிகள், theory ன் அறிவியல் தன்மையினைப் போக்கிவிடும்.

இலண்டன் நூல் நிலையம் மிகப்பெரியது. அந்த நூலகத்தின் முகப்பில் இந்த நூலகத்தை மிக அதிகமாக பயன்படுத்தியவர்கள் என மார்க்சு, அம்பேத்கர் ஆகியோரது படம் இடம் பெற்றிருக்கிறதாக நான் கேள்விபட்டேன்.

அப்படிப்பட்ட மாமேதைகளின் தத்துவத்தை பொய் என்று நிரூபிக்க முயல்வது எல்லோரையும் குழப்பவே உதவும். ஏற்கனவே குழப்பியவர்கள் வாதம் நிராகரிக்கப்பட்டன இன்று மார்க்சியம் மட்டுமே வெல்லமுடியாத தத்துவமாக உள்ளது.

வேண்டுமானால் மார்க்சியத்தை பொய் என்று நிரூபிக்க முயன்ற மாமேதை நான் என்று நீங்கள் உங்களை சந்தோசப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான்.

தமிழினிக்கு “மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள்“ என்ற பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே படியுங்கள்.

முடவன் நடக்கிறான் ஊமையன் பேசுகிறான் என்று பேசி ஏமாற்றும் தத்துவம் அல்ல அது.

மார்ச்சியம் ஒரு அறிவியல் எனவே, இதனை ஒரு கூத்து நடத்தி விளக்கி விட முடியாது.

இராமாயணம் மகாபாதம் போல அது ஒரு பொழுது போக்கு அம்சம் அல்ல அது.

உலக இயங்கியலில் எப்படி நிலபிரபுத்துவம் முதலாளித்துவமாக மாறும், எப்படி முதலாளித்துவம் பொதுவுடைமையாக மாறும் என்பது பற்றி அது விளக்கியுள்ளது. அது மீண்டும் முதலாளித்துமாக மாறினாலும், மீண்டும் அது எதை நோக்கி செல்லும் என்பதற்கான இயங்கியலை மார்க்சியம் விளக்கியுள்ளது.

எப்படி ஒரு அ.தி.மு.க வை , தி.மு.க. வை பா.ம.க-வை எந்த சித்தாந்த்தை வைத்து புரிந்து மக்கள் சென்றார்கள். சிலருக்கு நடிப்பு, சிலருக்கு தமிழ், சிலருக்கு சாதி, இது எதுவுமே நம் பிரச்சனை தீர்க்கவில்லை என்றவுடன் அவர்கள் எதைநேக்கி செல்வார்கள்.

ஏதேனும் ஒரு தீர்வை நோக்கி சென்றுதான் ஆகவேண்டும்.

காவிரியில் தண்ணீரும் வரவில்லை, இலவசமும் இல்லை, உணவே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வார்கள்? ஒரு நாள் எல்லாம் இழந்தவர்கள் யாரை எதிர்த்து போராடுவார்கள்.

அரசுக்கும் மக்களுக்குமான போராட்டமாகவும், இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்குமான போராட்டமாக அது மாறும். அந்த போராட்டம் எப்படிப்போகும் கற்பனை செய்து கொள்ளுங்கள். காவல் துறை தடுக்கலாம். நேபாளத்தில் காவல் துறை எதிர்த்தது, ஆனால் என்ன நடந்தது.நேபாள மக்களின் போராட்டத்தால் மன்னர் வீழ்ந்து சனநாயகத்துக்கு வழிகோல வழி இப்போது கிடைத்துள்ளது.

அது போல தேவைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படுவது என்பது காலத்தின் கட்டாயமாக்கப்படுகிறது.

நேபாளத்தில் மன்னர் ஆட்சி தான் மாற்றவே முடியாது என்று நினைத்திருந்தால் எதுவுமே அவர்கள் சாதித்து இருக்காது.

எனவே, இப்போது சித்தாந்தம் என்பது மக்களை சென்று அடையாமல் இருக்கலாம், ஆனால் இயக்கவியல் தத்துவப்படி அவர்களின் தேவைக்கான போராட்டம் வாழ்க்கைக்கான போராட்டமாக மாறும்.

தனது இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து எந்த மக்கள் சமூகமும் தன்னை ஒரு போதும் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது.

எனவே, தத்துவம் என்பது ஒரு விவாதமாக அல்லாமல் ஒரு செயல் வடிவமாக அவர்களை சென்றடைவது என்பது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே, காலம் மார்க்சியத்தின் வெற்றியை உறுதி செய்யும். அதுவரை வீண் வரட்டு விவாதங்களை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இது தொடர்பாக கேள்விகளை தொடர வேண்டும் என நினைத்தால், பின்னூட்டமாக கேள்விகளை தொதுத்து எழுதினால், பதில் அளிக்க வசதியாக இருக்கும். பின்னூட்டத்தில் தொடர்ந்து பதில் அளிக்க அதிக நேரம் பிடிக்கிறது.

29 comments:

முத்து(தமிழினி) said...

உருப்படியான பதிவு நண்பரே...நானும் படித்துக்கொள்கிறேன்...

சந்திப்பு said...

சுகுமாறன் நல்ல விளக்கங்களோடு எழுதியுள்ளீர்கள். மார்க்சியம் குறித்த விவாதங்கள் இணையத்தில் அதிகரிப்பது சிறப்பானது. அந்த வகையில் உங்களது பங்களிப்பு சிறப்பானது. நன்றி, வாழ்த்துக்கள்!

பட்டணத்து ராசா said...
This comment has been removed by a blog administrator.
இரா.சுகுமாரன் said...

//உருப்படியான பதிவு நண்பரே...நானும் படித்துக்கொள்கிறேன்//

நன்றி! தமிழினி

உங்களைத்தான் எதிர்பார்த்தேன்.
மீண்டும் வருக, விரிவான விமர்சனத்தை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

Vajra said...

நீங்கள் தவறாக புரிந்து கொண்டமைக்கு என் வாழ்த்துகள்.

Falsifiablity க்கும் Falsification க்கும் வித்தியாசம் இருக்கு.

நான் கார்ல் பாப்பர் (Karl popper) ன் falsifiability யைச் சொன்னேன். அந்த பதிவைப் படித்த நீங்கள் செல்வத்தின் பின்னூட்டத்தையும் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் மார்க்ஸ்வாத சித்தாந்தத்தையும் அதன் பொருளாதாரக் கொள்கையயும் பற்றி விவாதிக்கலாம், என்று அந்த பதிவு போட்டேன். கார்ல் மார்க்ஸ் போன்ற மேதையை இழிந்து பேச அல்ல. அதுவும், அந்த பதிவு எழுதக் காரணம்,

"ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை"

என்று எழுதிய நட்சத்திர தமிழினி வலைப்பதிவாளரால் தான்.

நன்றி,
ஷங்கர்.

இரா.சுகுமாரன் said...

//நீங்கள் தவறாக புரிந்து கொண்டமைக்கு என் வாழ்த்துகள்.//

நன்றி சங்கர் பின்னர் விரிவாக பேசுகிறேன்.

Vajra said...

//அப்படிப்பட்ட மாமேதைகளின் தத்துவத்தை பொய் என்று நிரூபிக்க முயல்வது எல்லோரையும் குழப்பவே உதவும். ஏற்கனவே குழப்பியவர்கள் வாதம் நிராகரிக்கப்பட்டன இன்று மார்க்சியம் மட்டுமே வெல்லமுடியாத தத்துவமாக உள்ளது.//

கார்ல் மார்க்ஸ் என்ன கடவுளா? அவர் சொல்லிவிட்டார் என்றால் அது தான் நடக்குமா?

"மார்க்ஸியம் மட்டுமே வெல்ல முடியாத தத்துவம்"

என்ன உளரல் இது? "அறிவு + இயல்" ல் வெல்ல முடியாத தத்துவம் என்று ஒன்றும் இல்லை. அப்படி இருந்தால் அது "அறிவு + இயல்" அல்ல, அது "அறிவு + அற்ற + இயல்".

நான் யாரையும் குழப்பவில்லை, அது என் வேலையும் அல்ல. கண்மூடித்தனமான நம்பிக்கை! அது மார்க்ஸ் வாத அடிப்படையிலேயே தவறானது. கண்மூடித்தனமாக எதையும் நம்பாமல் சிந்திக்கவேண்டும் என்று மார்க்ஸ் சொல்லவில்லையா? அது அவர் சித்தாந்ததுக்கும் பொருந்தும்.

//வேண்டுமானால் மார்க்சியத்தை பொய் என்று நிரூபிக்க முயன்ற மாமேதை நான் என்று நீங்கள் உங்களை சந்தோசப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான்.//

நான் ஏன் ஐயா நிரூபிக்க வேண்டும், அது ஒரு நல்ல தத்துவம் தான். ஆனால், நடைமுறைக்கு ஒவ்வாத தத்துவம். (அதை தத்துவம் என்று தான் நான் நம்புகிறேன், "தத்து பித்து" வம் அல்ல. உங்களை போல், விடாப்பிடியாகவும் கண்மூடித்தனமாகவும் நம்பும் கூட்டத்தால் தான் அது "தத்துப்பித்து"வமாக மாறி வருகிறது)

//எனவே, காலம் மார்க்சியத்தின் வெற்றியை உறுதி செய்யும். அதுவரை வீண் வரட்டு விவாதங்களை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//

கசப்பான உண்மை, இது வரை காலம் மார்க்ஸியத்தின் தோல்வியைத்தான் உருதி செய்துள்ளது.

நீங்கள் மார்க்ஸை "இறை தூதரைப்" போல் நம்பி இருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையைக் குறை கூற நான் யார்?

//
தோழர் தோழர் என்று சொல்லிக் கொண்டு லெனின் கூடவே கடைசிவரை ஒரு சி. ஐ. ஏ இருந்தான் என்று கருணாநிதி ஒருமுறை சொன்னார்.
கடைசிவரை இப்படி கூட இருந்து குழிபறிப்பது உள்ளிட்ட செயலை, அவர்கள் செய்த சதிவேலைகளைப் பற்றி பேசாமல் எப்படி விளக்குவது.
//
கருணாநிதி வேறு எவ்வளவோ சொல்லி இருக்கிறார். அவர் என்ன அரிச்சந்திரன் வாரிசா?

//
மார்க்சியம் தோற்றது என்றால் முதலாளித்துவம் அனைத்து சமூகப்பிரச்சனைகளையும் தீர்த்து வெற்றி பெற்றதா?
//
முதலாளித்துவத்திற்கு நான் வக்காலத்து வாங்க மார்க்ஸியத்தை எதிர்க்கவில்லை என்று தெளிவுபடக் கூறிக் கொள்கிறேன்.

மார்க்ஸ்வாதம் "சர்வரோக நிவாரணி" என்று வாதிடும் அன்பரே, முதலாளித்துவமும், ஒரு தத்துவம் தான். அது எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று நான் எங்காவது, உளறி இருந்தால் சுட்டவும்.

//Falsifiable என்பதற்கு பால்ஸ் மின் அகராதியில் கீழ்க்குறித்தவாறு விளக்கம் உள்ளது.
Falsifiable, a. —falsify, v. alter fraudulently, மாற்றி மோசடி செய்; disappoint, ஏமாற்றம் விளைவி; forge, கள்ளப் பத்திரம் உருவாக்கு; distort truth, உண்மையைத் திரித்துக் கூறு; prove to be wrong, தவறென்று நிரூபி; falsification, n. ஏமாற்றுதல்; பொய்க் கூற்று; மோசடி செய்தல்; —falsifier, n.
உங்கள் விவாதத்தை வேண்டுமானால் அப்படி ஏற்றுக்கொள்ளலாம்.//

உங்களால் மாற்று கருத்தை ஜீரணிக்க முடியவில்லை!! ? Digene, TUMS ஏதாவது வேண்டுமா?

//பலர் இப்படி ஒரு கேள்வி எழுப்புவார்கள், முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? எனக் கேட்பார்கள் மேலோட்டமாகப் பார்த்தால் அது சரியானது போல் தோன்றும்.
ஆனால்,
அந்த கேள்வியே அடிப்படையில் தவறானது.//

கேள்வி கேட்காமல் ஏற்று கொள்ள இது என்ன இறை வாக்கா? ஒரு "சமூக விஞ்ஞான" த் தத்துவம்.

//
இன்றைய உலகில் டார்வின் கொள்கைதான் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனை அவர் நிறுவியிருக்கிறார். அதை மீறிய மறுக்கிற தத்துவம் உலகில் இதுவரை இல்லை.
//

இருக்கிறது, ஆனால் அது அறிவியல் பூர்வமானதாக இல்லாதலால், அதை அறிவியல் ஏற்றுக் கொள்ள வில்லை.

//
உண்மையான விசயத்தை பொய் என்று நிருபிக்க இயலாது என்றால் அது அறிவியல் பூர்வமானது அல்ல.
//

உங்களுக்கும், தெரு கோடியில் இருக்கிற மசூதியில் இருக்கும் முல்லாவுக்கும் என்ன வித்தியாசம்?
அவர், முகம்மது கூறிய குர் ஆன் உண்மை, அதைப் பொய் என்று நிரூபிக்க இயலாது என்பார். நீங்கள் மார்க்ஸ் ததுவம் உண்மை, அதை பொய் என்று நிரூபிக்க இயலாது என்கிறீர்கள்.

//
உங்கள் முயற்சி வீண் ஏனெனில், நான் இன்று உங்களுக்கு பதில் எழுத வேண்டும் என்பதற்காக என்னிடம் உள்ள 1000 திற்கும் மேற்பட்ட நூல்களில் முன்னேற்றப் பதிப்பகத்தின் 250 க்கும் மேற்பட்ட நூல்களை ஒரு பார்வை கூட பார்க்க இயல்வில்லை. இதை படிக்கவே ஒரு ஆறு வருடம் ஆகும் போல் உள்ளது.
தவறு என்று நிரூபிக்க இந்த வலைப்பதிவில் 4-வரி எழுதிவிட்டு அந்த தத்துவத்தை தவறு என்று நீரூபிக்கும் முயற்சியை இத்துடன் கைவிடுவது நல்லது.
//
நான் இன்னும் அதைச் செய்யவில்லை அதற்கு முன் Do not jump to conclusion.

ஷங்கர்.

முத்து(தமிழினி) said...

சுகு,

அடுத்த வாரம்..வருகிறேன்...சந்திப்பின் சந்தோசத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

இரா.சுகுமாரன் said...

என்ன சங்கர்,
கோபமாயிட்டீங்களா?

நிதானமா எழுதுங்க.

//Do not jump to conclusion.//

நீங்கள் அப்படி செய்யாமல் இருந்தால்
பொறுமையாக விவாதிப்போம்.

Sriharan Sivasingarajah said...

வணக்கம் நண்பரே!

தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்
இனவுணர்வு தவறில்லை.

ஆனால் ஒரு மார்க்சியவாதி முழு மனிதவுலகுக்கு உரித்தாக இருக்க வேண்டுமா
நன்றி
Sri

இரா.சுகுமாரன் said...

//கார்ல் மார்க்ஸ் என்ன கடவுளா? அவர் சொல்லிவிட்டார் என்றால் அது தான் நடக்குமா?//

இப்படி கேள்வியை போட்டால் என்ன செய்வது, அதற்குத்தான் நன்றாக மார்க்சியத்தை படியுங்கள் என்றேன்.

எந்த கடவுள் என்ன சொல்லி என்ன நடந்தது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?.

இப்படி விவாதித்தால் எல்லா நோக்கமும் சிதறிவிடும், எனவே உங்களின் அனைத்து விமர்சனங் களையும் விரிவாக எழுதுங்கள்.

நான் பதில் தருகிறேன். ஆனால் நிதானம் மிக அவசியம்.

அதற்காக நீங்கள் நிதானம் இழந்து விட்டீர்கள் என்று சொல்லவில்லை.

நிதானமாக இருந்தால் இந்த விவாதம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் கருத்து.

Sriharan Sivasingarajah said...

வணக்கம் நண்பரே

தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்

இனவுணர்வு தவறில்லை. ஆனால் ஒரு மார்க்சியவாதி முழு மனிதவுலகுக்கு உரித்தாக

Correction இருக்கவேண்டுமா/ ----à இருக்கவேண்டாமா?

நன்றி

Sri

Vajra said...

எனக்கு எந்த கோபமும் இல்லை.

அறிவியல் அடிப்படை என்று வாதிட்டுவிட்டு, Prophecy எல்லாம் கொடுத்தீங்கன்னா?
சன் டீ.வி யில் ராசி பலன் கூறுபவர் ரேஞ்சில், இது தான் நடக்கும் என்று சொல்கிறீர்கள். :)

அது எப்படி அறிவியலாகும்?

அதைச் சுட்டிக் காட்டத்தான் சற்றே காட்டமாக எழுதவேண்டியதாயிற்று.

நீங்களே பாருங்கள்,

மார்க்ஸ் தத்துவம் தான் உண்மை, வெல்ல முடியாத தத்துவம், உண்மையைத் தவிர வேறில்லை. இது தான் நடக்கும், அது நடக்காது!!

இப்படி எல்லாம் சொன்னால் தத்துவம் உண்மையாகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். மற்றபடி எனக்கு எந்த கோபமும் இல்லை.

நீங்கள் எதை விவாதிக்க வேண்டும் என்கிறீர்கள்? மார்க்ஸ்வாதத்தின் அறிவியல் அடிப்படையா?

karl popper ன் falsifiability தத்துவத்திலும் குறைபாடுகள் உள்ளன. இல்லை என்று வாதிடவில்லை. ஆனால் இன்றய தேதியில் ஒரு அறிவிவில் தத்துவத்தின் அறிவியல் அடிப்படையை சோதிக்க, அதைத் தான் செய்கின்றனர்.

வேறு சில தத்துவங்களாலும், அறிவியல் அடிப்படையினைச் சோதிக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை. அதையும் விவாதிக்கலாம் என்பதினால் தான் நான் அந்த பதிவு போட்டுள்ளேன்.

"do not jump to conclusion"

உங்கள் விரிவான பதிவைப் பார்த்து விட்டுத் தான் நான் அப்படி எழுதினேன்.

//
தவறு என்று நிரூபிக்க இந்த வலைப்பதிவில் 4-வரி எழுதிவிட்டு அந்த தத்துவத்தை தவறு என்று நீரூபிக்கும் முயற்சியை இத்துடன் கைவிடுவது நல்லது.
//

தத்துவம் தவறு என்ற நிரூபணம் இருக்கட்டும்,

ஒரு தத்துவத்தை தவறு என்று "நிரூபிக்கும் முயற்சியே" தவறு என்று சொல்வது எப்படி? அது ஒரு முயற்சி தானே, அதில் வெற்றி, தோல்வி இரண்டும் உள்ளது.

இதைத் தான் கண்மூடித்தனமான நம்பிக்கை என்று கூறுகிறேன்.

கிருத்தவர்களிடம் விவிலியத்தைக் கேள்வி கேட்டால், Blasphemy என்பார்கள். கேள்வி கேட்கும் முயற்சி தவறு என்பார்கள், அதேதான் முஸ்லீம்களிடமும், யூதர்களிடமும், உங்கள் கருத்து அப்படி தான் இருக்கிறது, யூதம், கிருத்துவம், இஸ்லாம் போல் கம்யூனிசமும் ஒரு மதமாகிவிட்ட நிலை தான் தெரிகிறது.

தேரிந்து கொண்டீர்கள் என்றால் நல்லது. இல்லை, மார்க்ஸ் கூறியதில் தவறு இல்லை, என்று நம்புகிறீர்கள் என்றால், உங்கள் நம்பிக்கைக்குத் தடையாக நான் இருக்க விரும்பவில்லை.

நன்றி,

ஷங்கர்.

இரா.சுகுமாரன் said...

Sankar narayanan M.R

//நான் ஏன் ஐயா நிரூபிக்க வேண்டும், அது ஒரு நல்ல தத்துவம் தான். ஆனால், நடைமுறைக்கு ஒவ்வாத தத்துவம். (அதை தத்துவம் என்று தான் நான் நம்புகிறேன், "தத்து பித்து" வம் அல்ல. உங்களை போல், விடாப்பிடியாகவும் கண் மூடித்தனமாகவும் நம்பும் கூட்டத்தால் தான் அது "தத்துப்பித்து"வமாக மாறி வருகிறது)//

நன்றாக படித்தீர்கள் என்றால் தெரியும்.
நான் விடாப்பிடியாகவும் கண்மூடித்தனமாக நம்பவில்லை.

எதையும் படிக்காமல் பேசவும் இல்லை. அதனை நம்பாமல் போனால் மட்டும் மார்க்சியம் செழித்தோங்குமா?.
குழப்பல் வாதிகளால் தான் அது பித்துவமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரா.சுகுமாரன் said...

Sriharan Sivasingarajah மொழிந்தது…

//வணக்கம் நண்பரே

தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்

இனவுணர்வு தவறில்லை. ஆனால் ஒரு மார்க்சியவாதி முழு மனிதவுலகுக்கு உரித்தாக
Correction இருக்கவேண்டுமா/ ----à இருக்கவேண்டாமா?
நன்றி
Sri//

Sriharan Sivasingarajah அவர்களுக்கு,
ஒவ்வொரு தேசிய இனமும் அதற்கான விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அதன் கடமை.

அந்த கடமையின் அடிப்படையில் தான், என் தேசிய இன விடுதலையே என் நோக்கமாக நான் சொல்லிக் கொள்கிறேன். அதைத்தான் தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம், என்கிறேன் அவ்வளவு தான். நான் எந்த தேசிய இன விடுதலைக்கும் எதிரானவன் இல்லை.
இதில் எந்த தவறும் இல்லை.

Anonymous said...

This is an example of dialog of the deaf.One person uses ideas of Karl Popper and the other person is
totally ignorant about it.But Poppers views on science have been contested.Feyeraband challenges the very idea of scientific methodology while Kuhn has explained how science advances.
So poppers is the not the final word in this issue.But you can attack marxism using his works.
Anyway marxists too have responded
to that.I would prefer not to attach the label of scientific to
marxism.

Vajra said...

//
I would prefer not to attach the label of scientific to
marxism.
//

அனானி அவர்களே நன்றி.

நிச்சயமாக, போப்பரின் தத்துவத்தில் ஓட்டைகள் இல்லை என்று நான் வாதிடவில்லை. நான் கூற முற்பட்டதெல்லாம், அறிவியல் அடிப்படை, அறிவியல் பூர்வம் என்று பொய்யான நம்பிக்கைகளை மார்க்ஸ்வாதிகள், மார்க்சியத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவே.

இதை ஒத்துக் கொள்ளும் மனனிலையில் எந்த மார்க்ஸ்வாதியும் இல்லை என்பது நிதர்சனம்.

வேடிக்கை என்னவெண்றால் மார்க்ஸியத்தை கேள்வி கேட்பதே தப்பு என்கிறார் இந்த வலைப்பதிவாளர்.

ஷங்கர்.

செல்வன் said...

அன்பு சுகுமாரன்,வஜ்ரா ஷங்கர்

சுருக்கமாக இந்த பதிவில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு என் பதில் இதோ.விரிவாக இவற்றை விளக்க வேண்டுமானால் தனிபதிவு தான் போட வேண்டும்.தேவைப்பட்டால் அதை செய்கிறேன்.

1.மார்க்ஸியம் விஞ்ஞானமல்ல.விஞ்ஞானத்தின் அடிப்படையை விளக்கும் எபிஸ்டமாலஜி எனும் துறையாகும்.அதாவது விஞ்ஞானத்தின் தகப்பன் மார்க்ஸியம் என்று சொல்லலாம்.

2.ஷங்கர் சொன்ன carl popper's falsification எனும் உண்மையை அறியும் முறை மிக சரியானது.ஆனால் மார்க்ஸியத்தை பாப்பரின் முறை கொண்டு மதிப்பிட இயலாது.ஏனெனில் மார்க்ஸியம் விஞ்ஞனம்ல்ல.விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானம் அல்லது epistemology என சொல்லலாம்.(அதேசமயம் பாப்பரின் முறையில் சில தவறுகள் உள்ளன.பீட்டர் ஒல்சன்(1982)மற்றும் நாகெல் பாப்பரின் falsification மறுக்கின்றனர்)

3.மார்க்ஸை சமூக விஞ்ஞானி,தத்துவ மேதை,பொருளாதார மேதை,அரசியல்வாதி என பிரித்துக்கொள்ள வேண்டும்.சமூகவிஞ்ஞானியாக மார்க்ஸ் மாபெரும் வெற்றி பெற்றார்.தத்துவமேதையாகவும் மார்க்ஸ் மாபெரும் வெற்றி அடைந்தார்.20ம் நூறறாண்டின் தத்துவமேதைகள் அனைவரும் மார்க்ஸை தமது தந்தையாக,குருவாக கருதுகின்றனர்.பின்நவீனத்துவத்தின் இறைவன் காரல் மார்க்ஸ்தான்.

4.பொருளாதார மேதையாக மார்க்ஸ் தோல்வி அடைந்தது மறுக்க முடியாத உண்மை.அதை பற்றி ஷங்கர் சொன்னது உண்மைதான்.

சுருக்கமாக

மார்க்ஸ் தத்துவஞானியரின் இறைவன்.வதைபடும் மக்களின் கடவுள்.ஆனால் தோல்வி அடைந்த பொறுளாதார மற்றும் அரசியல் நிபுணர்

மார்க்சை பற்றி நான் எழுதிய இன்னொரு கட்டுரை.இதை படித்தால் சில தெளிவுகள் கிடைக்குமென்று நம்புகிறேன்.

http://holyox.blogspot.com/2006/02/blog-post_04.html

இரா.சுகுமாரன் said...

அனாநி, சங்கர், செல்வம் ஆகியோருக்கு நன்றி,

விவாதிபோம், வருகிறேன்.

Anonymous said...

விரிவாக இவற்றை விளக்க வேண்டுமானால் தனிபதிவு தான் போட வேண்டும்.தேவைப்பட்டால் அதை செய்கிறேன்.

Please DONT do so.You are creating more than enough confusion by making all sorts of claims.I dont know where you are studying or what program you are studying in
but i am sure that you are very
confused.epistemology is older than
marx or marxism.post modernism
questions some of the hypotheses
of marxism.not all post modernists
agree with marx or marxism.post modernists are skeptical about grand narratives.please try to understand what you read.please
dont write in tamil.there is
lot of confusion and dont add
to it.

செல்வன் said...

My dear friend,

epistemology has various branches and theroies and paradigms.Marxism is one branch of epistemology.

"...So far Marxist epistemology sets itself up as absolute naive realism of the usual empiricist type. The peculiarity of Marxist materialism lies in the fact that it combines this realistic outlook with another one, the pragmatic. From the notion that all contents of our consciousness are determined by our economic needs it follows equally that each social class has its own science and its own philosophy. An independent, nonparty science is impossible; the truth is whatever leads to success, and practice alone constitutes the criterion of truth...."

http://radicalacademy.com/philmarx.htm

//post modernism
questions some of the hypotheses
of marxism.not all post modernists
agree with marx or marxism.post modernists are skeptical about grand narratives//

I claimed marx to be a guru of postmodernism.I never claimed that his philosophies are not questioned or challenged by postmodernists.

Postmodernists constantly question and criticize each other.Marx is no exception.

இரா.சுகுமாரன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

"மார்க்ஸியம் விஞ்ஞானமல்ல.விஞ்ஞானத்தின் அடிப்படையை விளக்கும் எபிஸ்டமாலஜி எனும் துறையாகும்.அதாவது விஞ்ஞானத்தின் தகப்பன் மார்க்ஸியம் என்று சொல்லலாம்."

From wikipedia

Epistemology is the branch of philosophy which studies the nature, origin, and scope of knowledge. The word "epistemology" originated from the Greek words episteme (knowledge) and logos (word/speech). There are different approaches to the theory of knowledge.

Historically, epistemology has been one of the most investigated and debated of all philosophical subjects. Much of the debate in this field has focused on analyzing the nature of knowledge and how it relates to similar notions such as truth, and belief. Much of this discussion concerns justification. Epistemologists analyze the standards of justification for knowledge claims, that is, the grounds on which one can claim to know a particular fact. In a nutshell, epistemology addresses the question, "How do you know what you know?"

The way that knowledge claims are justified depends on the general approach to philosophy one supports. Thus, philosophers have developed a range of epistemological theories to accompany their general philosophical positions. More recent studies have re-written centuries-old assumptions, and so, the field of epistemology continues to be vibrant and dynamic.


விஞ்ஞானத்தின் அடிப்படையை விளக்கும் எபிஸ்டமாலஜி எனும் துறையாகும்-பிதற்றல்.
அடக்கடவுளே, இப்படியெல்லாம் கூட உளற முடியுமா.எம்.ஜி.ஆரின் அண்ணாயிசமே பரவாயில்லை. மார்க்ஸியம் அறிவியலின் தந்தையாம்.மாக்ர்ஸிய மெய்யறிவுக் கோட்பாடு உண்டு.ஆனால் நீர் என்ன
எழுதியிருக்கிறீர் என்பதை முதலில் படித்து விட்டு பதில் எழுதும். அறிவியல் மார்க்ஸியத்திலிருந்தா தோன்றியது. எதையாவது உளற வேண்டியது, அதை சுட்டிக்காட்டினால் அதை மழுப்பா வேறு எதையாவது உளற வேண்டியது. இப்படியே எழுதிக் கொண்டே போகலாம்.

இரா.சுகுமாரன் said...

//Please DONT do so.You are creating more than enough confusion by making all sorts of claims.I dont know where you are studying or what program you are studying in but i am sure that you are very confused//

மார்க்சு அவர்களை உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டபோது “ எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகப்படு அப்போது தான் பல உண்மைகள் கிடைக்கும் என்று சொன்னார்“ எனவே, குழப்பத்திற்கு பின் தீர்வு கிடைக்கிறதோ! இல்லையோ! அது வேறு விசயம், எனவே, செல்வன் கருத்துக்களை பதிவு செய்வதில் தனிப்பதிவு போட விரும்பினால் அதை நான் வரவேற்கிறேன். நண்பர் சங்கர் கூட என்ன சொல்ல வருகிறார் என்பதை நானும், இப்போது முன்னை விட கூடுதல் கவனத்துடன் கவனிக்கிறேன்.

செல்வன் said...

ஐயா அனானிமஸ் நண்பரே,

//அறிவியல் மார்க்ஸியத்திலிருந்தா தோன்றியது.//

இதை நான் எங்கு சொன்னேன்?

நான் சொன்னது மார்க்ஸியம் அறிவியலின் தகப்பன் என்பது.

இது இந்தியாவின் தந்தை காந்தியடிகள் என்பதுபோல் தான்.

காந்திக்கு முன்பும் இந்தியா இருந்தது.பின்பும் இருக்கிறது.

மார்க்ஸியம் என்பது ஒரு எபிஸ்டமாலஜி முறை.எபிஸ்டமாலஜி தேங்கி நிற்கும் துறையல்ல.அத்துறைக்கு பங்களித்தவர்களில் மார்க்ஸ் முக்கியமானவர்.

இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது?

Anonymous said...

Gandhi is called as the father of the nation as he was the most important leader who fought against the british and won freedom.Can anyone call Marx
as father of epistemology
or science.
Marxism is not epistemology
although it might have contributed to epistemology.There can be a marxist epistemology but marxism
per se is not epistemology.If it were so that it would be self defeating. if only you know what
differentiates philosophy of marx from others you would understand this basic fact.

There are many schools of thought in 20th century philosophy and not all are based on marxism, nor all philosophers accept marx as their guru.Popper had criticised marxism and marx. some existentialists are influnced by thoughts of marx but they cannot be branded as marxists.In fact a major philosopher of 20th century focualt was not a marxist.For that matter nor heidegger was.
Mr.Selvan you better stop displaying your half baked stuff
here.Atleast get the funadamentals
and facts right.You dont know how to write clearly in Tamil.

நான் சொன்னது மார்க்ஸியம் அறிவியலின் தகப்பன் என்பது
Has any scientist worth calling
scientist or any philosopher of
science has said so.Whether it is
science or philosophy of science,
impact of marxism is mariginal.
Enough is enough.I longer want to waste my time on the nonsense you write.

இரா.சுகுமாரன் said...

//Marxism is not epistemology
although it might have contributed to epistemology.//

pauls tamil engligh e- dictionary

epistemology, n . study of human knowledge, ; — மனிதனின் அறிவைப்பற்றிய தத்துவம் epistemological, a .

thanks anonymous

செல்வன் said...

Anonymous,

There is no point in continuing a debate where the opponents views are called as nonsense.

இரா.சுகுமாரன் said...

இது தொடர்பாக நான் புதிய பதிவு தயார் செய்து கொண்டுள்ளேன். விரைவில் சந்திப்போம்.
நன்றி!