Sunday, March 22, 2009

இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் கைதை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, இயக்குனர் தோழர் சீமான், தோழர் நாஞ்சில் சம்பத் மூவர் மீதும் அடக்குமுறை சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டீத்து வாய் கட்டி - கை விலங்குடன் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத்தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில தந்தைபிரியன் வீராசாமி வீர.மோகன் இளங்கோ விஜயசங்கர் சுரேசு, இரவிச்சந்திரன் மற்றும் பொறுப்பாளர்களுடன் பெரியார் திராவிடர் கழக தேழர்களும் பிற தோழமை அமைப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டனர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் விலங்கிட்டும் வாயில் கருப்பு துணிகட்டியும் பங்கேற்றனர்.






இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் கைதை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, இயக்குனர் தோழர் சீமான், தோழர் நாஞ்சில் சம்பத் மூவர் மீதும் அடக்குமுறை சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டித்து வாய் கட்டி - கை விலங்குடன் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத்தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தந்தைபிரியன், வீராசாமி ,வீர.மோகன், இளங்கோ, விஜயசங்கர், சுரேசு, இரவிச்சந்திரன் மற்றும் பொறுப்பாளர்களுடன் பெரியார் திராவிடர் கழக தேழர்களும் பிற தோழமை அமைப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் விலங்கிட்டும் வாயில் கருப்பு துணிகட்டியும் பங்கேற்றனர்.



Sunday, March 15, 2009

புதுச்சேரியில் நாளை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டம் டாக்டர் ராமதாஸ்-வைகோ-திருமாவளவன் த.பாண்டியன் நெடுமாறன் பங்கேற்பு

புதுவையில் நாளை (16-03-2009) இலங்கை தமிழர் பாது காப்பு இயக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், வைகோ, தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

உலக நாடுகள் இலங்கையில் நடைபெறும் இனவெறி போரை நிறுத்த தலையிடவேண்டும் என்று இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து மனு அளித்து வருகின்றோம். அதுமட்டுமில்லாமல் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் முன்னின்று தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள்திரள் பேரணி என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

டாக்டர் ராமதாஸ்-வைகோ

இதன் தொடர்ச்சியாக புதுவையில் நாளை (திங்கட் கிழமை) மாலை 5-மணிக்கு பெரியார் திடல் சிங்காரவேலர் சிலையருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் தமிழக தலைவர்கள் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க.வின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, மா.நடராசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு இலங்கையில் அழிந்துவரும் நமது தமிழினத்தை காப்பாற்ற உரிமை குரல் எழுப்ப உள்ளார்கள்.

மேலும் புதுச்சேரியில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி, அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். எனவே புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், பொதுமக்கள் அனைவரும் சாதி, மதம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை கடந்து தமிழினமாய், தமிழினம் காக்கும் பொதுக்கூட்டத்திற்கு திரண்டு வந்து பொதுக்கூட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் பாவாணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tuesday, March 03, 2009

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீமான் போட்டியிடுவார் - இயக்குநர் தங்கர்பச்சான்


புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரைப்பட இயக்குநர் சீமான் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காகச் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் 2.3.2009 திங்கள்கிழமை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச் சாலைக்கு வந்தார்.
காலை 11 மணி முதல் இயக்குநர் சீமானைப் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனுவை பெற்றுக் கொண்ட சிறைத்துறையினர் எந்தவித பதிலையும் கூறவில்லை.


இதனால் சுமார் ஒரு மணிநேரம் பொறுத்துப் பார்த்த தங்கர்பச்சான், புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச் செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் நண்பகல் 12 மணிக்கு சிறையின் வாயிலில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த காலாப்பட்டு போலீஸ் எஸ்.ஐ. கே.வரதராஜன் சிறைத் துறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 'அனுமதி உண்டா இல்லையா என்று சொல்லாமல் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்' என்று கேட்டார். பின்னர் அவர் அனைவரையும் சிறைக்குள் அழைத்துச் சென்றார்.


பின்னர் இயக்குநர் தங்கர்பச்சன் உட்பட அனைவரும் சீமானை சந்தித்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள சீமானைச் சந்தித்து விட்டு வந்த திரைப்பட இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் பத்திரிகையாளர்களிடம் கூறியது:


தமிழர்களின் உரிமைகள், உணர்வுகளைக் காணாமல் போகச்செய்தவர்கள் அரசியல்வாதிகள். காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே ஏற்க மறுக்கின்றனர். இது தொடர்பாக 27 முறை பேசியும் முறையான தண்ணீர் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. கச்சத்தீவைப் பறி கொடுத்ததால் தமிழக மீனவர்கள் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.


தமிழனுக்காகவும், தமிழினத்திற்காகவும் அரசியல்வாதிகள் குரல் எழுப்பவில்லை. குரல் கொடுத்திருந்தால் மத்திய அரசு செவிமடுத்திருக்கும். தமிழன்தான் குரல் எழுப்புகிறான். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழக தலைவர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் ஒன்று கூடி பேசியிருந்தால் போதும். மத்திய அரசு பணிந்திருக்கும். ஆனால், அதை யாரும் செய்யவில்லை.
தற்போது தமிழர்களுக்காகவும், தமிழினத்திற்காகவும் குரல் கொடுக்கும்காலம் வந்துவிட்டது.


மற்றவர்கள் போல் திரைப்படம் உண்டு தன் சம்பாத்தியம் உண்டு என்று இல்லாமல் சீமான் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். சீமான் மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வரும் நாயாளுமன்றத் தேர்தலில் சீமான் போட்டியிட உள்ளார். சீமானிடம் ஓட்டு வங்கி உள்ளதால் அவரை சிறையில் வைத்துவிட வேண்டும் என்று அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். தமிழக இளாஞர்கள், மாணவர்கள் அவரை வெற்றிப் பெற செய்வார்கள். தமிழ் மக்கள் சீமானுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அவரை நான் உட்பட பலரும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
சிறையில் இருந்தபடி தமிழ் இனம், மொழிக்காக சீமான் குரல் கொடுத்து வருகிறார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச்செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Thursday, February 26, 2009

தமிழருவி மணியனுக்கு பாராட்டு சுவரொட்டி ஒட்டிய இளைஞர் பட்டாளம்

புதுச்சேரி பேரூந்து நிலையம் அருகில் இன்று காலை சென்றிருந்தபோது “தமிழ்ருவி மணியன்” காங்கிரசு கட்சியிலிருந்து தனது பொதுச்செயலர் பதவியிலிருந்து விலகியதற்கு பேரூந்துகளில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். அவர்களை பார்த்தால் அதிகம் படித்தவர்கள் போல் தெரியவில்லை. ஆனால் உணர்ச்சிப் பிழம்பாக தமிழீழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி தங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.



இங்கே சுவரொட்டி ஒட்டினால் எந்த பயனும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம், இருந்தும் நாங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். அங்கே செத்து மடியும் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற நாங்கள் ஈழம் செல்லவும் தயாராக இருக்கிறோம், அதற்கு ஏதேனும் வழி சொல்லுங்கள் என்று ஒரு இளைஞர் கேட்டார். அது ஏதோ அறியாமையால் கேட்ட கேள்விபோல் எனக்கு தோன்றவில்லை. உண்மையில் வாய்பிருந்தால் செல்வார்கள் போலிருக்கிறது, அந்த அளவுக்கு அவர்களின் குரலில் அழுத்தம் இருந்தது, ஒரு வருத்தம் இருந்தது.




நீங்கள் எந்த கட்சியை சேர்தவர்கள் என்று கேட்டபோது “ இல்லை அண்ணா நாங்கள் எந்த கட்சியையும் சேராதவர்கள்” எங்கள் சுவரொட்டிக்கும் கீழே பாருங்கள் அது தெரியும் என்றார் ஒரு இளைஞர்." நெல்லித்தோப்பு உருளையன் பேட்டை இளைஞர்கள் புதுவை" என்று அந்த சுவரொட்டியில் இருந்தது. அதிகம் காசு பணம் வைத்துக்கொண்டு ஏதோ பொழுது போக்குக்காக அவர்கள் இதை செய்யவில்லை, அவர்களின் அடிமனதில் படிந்திருக்கும் சோகத்தின் வெளிப்பாடாக இடையிடையே அங்கே அமர்ந்து விளையாடிக் கொண்டே சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்,

அவர்களுக்கு எமது நன்றியை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

மறக்காமல் அவர்களின் பெயரை கேட்டு வந்தேன், த.இளையராசா, செ.மணிகண்டன், இரா.செயக்குமார், ஏ.அருள், சூசை, சு. ஜான்சன், வே, ஜூலியோ, மு. எழில், கு. அருணாச்சலம், மு.இளையராசா, வினோத், சகாயம், உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றார்கள், உடன் அவர்களின் அலைபேசி எண்ணும் கொடுத்தார்கள்; முடிந்தால் நீங்களும் அவர்களை பாராடுங்கள்: எண் : 98944 08879, 94430 36606

Saturday, February 14, 2009

புதுச்சேரியில் நான்காவது நாளாக பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

புதுச்சேரியில் நான்காவது நாளாக பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயிலும் மாணவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று 4-வது நாளாக நடைபெறுகிறது. இரண்டாவது நாள் போராட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடிய புகைப்படக்காட்சிகள். பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் தந்தைபிரியன், வீரமோகன், விஜயசங்கர், இளங்கோ, சுரேசு, சிவமுருகன், பெருமாள் உட்பட்ட தேழர்கள் உடன் இருந்தனர். பல்வேறு கல்லூரி மாணவர்கள், மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

  1. திரைப்பட இயக்குனர் சீமான் மாணவர்களை வாழ்த்திப்பேசினார்.
  2. ம.தி.மு.க வை சேர்ந்த திரு வந்தியத்தேவன்,
  3. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலர் திரு வணங்காமுடி,
  4. சமஜ் வாடி கட்சி புதுவைத் தலைவர் தங்க கலைமாறன்,
  5. விடுதலை சிறுத்தைகளின் மாநில அமைப்பாளர் திரு பாவாணன்,
  6. ம.தி.மு.க செல்வராசு,
  7. மக்கள் உரிமைக்கூட்டமைப்பை சேர்ந்த கோ.சுகுமாரன்,
  8. தமிழர் தேசிய இயக்கத்தின் திரு இரா.அழகிரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினர்.
  9. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்.
  10. கடலூர் பெரியார் அரசினர் கலைக்கல்லூரி மாணவர் வாழ்த்தினர்கள்.
  11. புதுச்சேரி அரசுவிரைவு பேருந்து கழகம் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
  12. புதுச்சேரி அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு மேநிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

அந்த மாணவர்களும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.









புதுச்சேரியில் தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளில் நிறைவு

புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து ராஜபக்சே உருவப் படத்தை எரியூட்டினர்.

புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவப்படத்தை எரியூட்டினர்.

இந்தப் போராட்டத்தை வாழ்த்தி பாமக அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அனந்தராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், விடுதலை வேங்கைகள் மங்கையர்ச்செல்வன், பெரியார் திராவிடர் கழகம் லோகு.அய்யப்பன் வாழ்த்திப் பேசினர்.

போராட்டத்துக்கு, சட்டக்கல்லூரி 4-ம் ஆண்டு மாணவர் சக்தி, முதலாம் ஆண்டு மாணவர் அன்பு, முற்போக்கு மாணவரணி செயலாளர் பாஸ்கர், மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சதீஷ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

20-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Sunday, February 01, 2009

துரோகமே உருவான காங்கிரசும் தமிழினமும்


இலங்கையில் போரை நடத்துவது யார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு தெளிவாகி இருக்கும், வெள்ளைக்காரனுக்கு பிறந்த கள்ளக் குழந்தையான இந்திய தேசிய காங்கிரசு அரசுதான் அங்கே போரை நடத்தி வருகிறது என்பதை பல்வேறு செய்திகளிலிருந்து உறுதிப்படுத்தி கொள்ள முடிகிறது.

நாம் அறிந்து வகையில் திருட்டுக் கும்பலாக நாடு கடத்தப்பட்ட சிங்களர்களுக்கு இப்போது எப்படி இவ்வளவு வலிமை வந்தது என பார்க்கின்ற போது இப்போதுதான் அதன் முழு வெளிச்சம் உலகிற்கு வெளியே வரத் தொடங்கியுள்ளது, அவன பிடிப்பேன், இவன பிடிப்பேன் என கூறும் தமிழக உளவு பிரிவு கூட இதை தெரிந்து கொள்ளவில்லையா? தெரிந்தே தான் இந்த நாடகத்தை தமிழக அரசு நடத்திவருகிறதா? என்றெல்லாம் பார்க்கிற போது இந்த அரசுகள் மக்கள் விரோத அரசாக மக்களை ஏமாற்றுகிற அரசாக மோசடி அரசுகளாக இருப்பதை அனைத்து தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்திய அரசு அவ்வப்போது மெளன காத்தாலும் அடிக்கடி இலங்கை அரசு தான் இந்தியா என்ன எங்களிடம் பேச வருகிறது என்பதை அறிவித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்திய அரசு வாய்திரக்கவில்லை. சிவசங்கர் மேனர் இந்தியாவிலிருந்து கிளம்பிய உடன் இந்திய பத்திர்க்கைகள் போர் நிறுத்தம் கேட்டு சிவசங்கர் மேனர் செல்கிறார் என எழுதின ஆனால், இலங்கை அரசோ அது பற்றி அவர் பேசமாட்டார் என அறிவித்தது.

இந்திய அரசு மக்களுக்கு எந்த வித அறிவிப்பையும் கொடுக்காமல் இலங்கை செல்கிறது அல்லது பொய்யான பரப்புரைகளை தமிழக அரசை விட்டு பரப்பிவிட்டு பின்னர் அங்கு வேறு ஏதோ பேசிவிட்டு வருகிறார்கள். இந்திய காங்கிரசு அரசுக்கு தமிழ்மக்களின் வாக்கு தேவையில்லை என அது உறுதி செய்து கொள்கிறது. அல்லது தமிழக அரசியல் வாதிகளின் மோசடிப் போக்கை காங்கிரசு அரசு புரிந்து கொண்டுள்ளது.

இலங்கைக்கு வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் இராணுவ தளவாடங்களை அனுப்பி இருக்க முடியும் ஆனால் தஞ்சையிலிருந்து அனுப்பி வைப்பது தமிழர்களை கேலி செய்கிற ஏளனம் செய்கிற விசயமாகவெ இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரசின் இந்த கயவாளித்தனத்திற்கு தமிழக பிற கட்சிகளின் கயவாளித்தனமான கொள்கைகளே காரணமாகும் என்பது உறுதி. இலங்கையில் தமிழினம் அழிந்தாலும் தன் நலம் பாதிக்கக்கூடாது என்ற எண்ணம் தான் இந்திய தேசிய காங்கிரசின் இந்த ஏளமான நடவடிக்கைக்கு காரணமாகும்.

தமிழர்கள் வரிப்பணத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும் இந்த அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் தாம் அடுத்தமுறை ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை அறிந்து தான் இந்த கட்சி இப்படி நடந்து கொள்வதாக தெரிகிறது.


தமிழ் மக்களே சிந்தியுங்கள் !
இந்திய அரசுதான் தமிழினத்தின் முதல் எதிரி!
இந்திய காங்கிரசு கொலைவெறி அரசை தூக்கி எறிவோம்!!!
இந்திய மேலாதிக்கத்தை எதிப்போம்!!!!

Saturday, January 31, 2009

புதுச்சேரியில் சிங்களர் நடத்தும் விடுதியில் தி.மு.க பாரளுமன்ற உறுப்பினர் குப்புசாமி

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் தாக்குதல் நட்த்திய சிங்களர் நட்த்தும் விடுதியில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் குப்புசாமி தலைமையில் பதினொரு பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சிங்களர் நட்த்தும் விடுதியில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு என்ன வேலை என புதுவை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புதுச்சேரியில் தங்கி தமிழருக்கு எதிரான சதிவேலையா என பலரும் அச்சத்துடன் உள்ளனர். புதுவையில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான விடுதியை சிங்கள நிறுவனம் ஒன்று குத்தகை எடுத்து நட்த்திவருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் குத்தகை எடுத்து விடுதி நட்த்துவதாக தெரிகிறது.

புதுச்சேரியில் சிங்களர் நடத்திய விடுதி உடைப்பு

சிங்களர் ஒருவர் புதுச்சேரியில் ஒரு உணவகத்தை குத்தகைக்கு எடுத்து நட்த்தி வருகிறார். அந்த இடம் ஏற்கனவே அசந்தா திரையரங்கமாக இருந்தது. நவீன வசதிகளை கொண்ட அந்த புதிய விடுதி சமீபத்தில் தான் கட்டப்பட்டது. அந்த விடுதியை நள்ளிரவு ஒருமணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் கண்ணாடிகள் பலவற்றை அடித்து உடைத்தனர். இதில் இரவே ஒருவர் பிடிபட்டார், மேலும் எட்டுபேர் யார் என போலிசார் விசாரித்துவருகிறார்கள். இதை ஒட்டி புதுவையில் பரபரப்பு நிலவுகிறது.