வாக்களிப்பது உங்கள் கடமை,
கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை,
உங்கள் கடமையை நீங்கள் செய்யத்தவறினால் நீங்கள் பிணத்திற்குச் சமம், சனநாயக நாட்டில் கொள்ளை அடிப்பதற்கான அங்கீகாரமான வாக்கை நீங்கள் வழங்காவிட்டால் உங்களின் வாக்களிக்கும் அதிகாரம் பறிக்கப்படவேண்டும். அப்படி வாக்களிக்காதவர்கள் சனநாயக நாட்டில் வாழத்தகுதியற்றவர்கள், இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசின் சலுகைகள் பெற அவர்களை தகுதியற்றவர்கள் என அறிவிக்க வேண்டும், கட்டாய வாக்களிக்க சட்டத்திருத்தம் செய்யவேண்டும் என்றெல்லாம் பேசி இந்த போலி சனநாயகத்தை பாதுகாக்க முனைகிறார்கள் பலர்.
நிலையான ஊழலுக்கும், உத்தரவாதமான கொள்ளைக்கும் அங்கிகாரம் வழங்குவதற்குத் தான் வாக்களிக்க வேண்டியுள்ளது.
நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடும். எனவே, நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள்.
மழைநீர் சுத்தமாகத்தான் பொழிகிறது, அது தெருக்களில் பெய்த பின் சாக்கடையில் கலந்து அது சாக்கடையாகவே மாறிவிடுகிறது.
"எத்தனை வாசனையுள்ள இனிப்பான பொருட்களை நாம் உண்டாலும் அது அது நாற்றமடிக்கும் மனிதக்கழிவாகவே வெளிவருகிறது".
அப்படித்தான் எத்தனை பெரிய உத்தமர்களையும் இந்த அரசியல் அமைப்பு ஊழல்வாதிகாளாக மாற்றிவிடுகிறது.
ஒருகாலத்தில் "மிஸ்டர் கீளின்" என்று அழைக்கப்பட்ட ராசீவ் காந்தி பிற்காலத்தில் மிகப்பெரிய பீரங்கி ஊழலில் பேசப்பட்டதை மறந்துவிட வேண்டாம்.
அரசியல் வாதிகள் மக்களின் நம்பிக்கையை, நன்மதிப்பை இழந்து நீண்ட நெடுங்காலமாயிற்று. கடந்தகால தேர்தல் முடிவுகள் அவற்றை நமக்கு உணர்த்துகிறது. வாக்களிப்பவர்களின் விகிதம் ஒவ்வொரு 10 ஆண்டுகளில் பின்வருமாறு குறைந்துவருகிறது. 1962, 67 தேர்தல்களில் சராசரி 73.62 சதவிகிதம், 80, 86, 89 களில் சராசரி 69.6 சதவிகிதம், 1991, 96, ஆண்டுகளில் 63 சதவிகிதம், 2001 ஆம் ஆண்டில் 59.07 சதவிகிதம், என குறைந்து வந்துள்ளதை காணலாம். அரசியல் வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததைத்தான் இந்த விகிதம் நமக்குக் காட்டுகிறது.
வட இந்திய மாநிலம் ஒன்றில் "சக்திமான்" நாடகத்தொடரைப் பார்த்த சிறுவன் அதனை உண்மைச் சம்பம்பவம் என நம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் தான் குடியிருந்த 5-வது மாடியிலிருந்து சக்திமான் என்னைக்காப்பாற்று என்று கூறி கீழே குதித்தான். தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அவனைக்காப்பாற்ற அங்கே சக்திமான் வரவில்லை. அதைப் போலத்தான் இந்த "தேர்தல் நாடகத்தை" பார்த்து இது உண்மை என்று நம்பி தேர்தலில் வாக்களித்து தற்கொலைக்கு ஒப்பாக பலர் நடந்து கொள்கிறார்கள்.
இங்கு வாக்களிப்பவர்களைப்பற்றி சற்று பார்க்காலாம். நகர்ப்புறங்களின் வாக்கு விகிதம் கிராமப்புறங்களைவிட எப்போதும் குறைந்தே காணப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மக்கள் கல்வி அறிவு , அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் வாக்களிப்பவர்களாக உள்ளனர். இந்த சனநாயகம் தழைத்து ஓங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு வாக்குப்பதிவுகள் அனைத்தும் நடைபெறுவதில்லை. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் வழங்கும் ரூ 50, 100, க்கும், சில மது பானங்களுக் காகவும் வாக்களிப்பவர்களும் இதில் அடங்குவார்கள்.
அது போகட்டும் நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் உறுப்பினர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? நரசிம்மராவ் நாடாளு மன்றத்திற்குத் தெரியாமல் ?காட்? ஒப்பந்ததில் கையப்பமிட்டார். பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக?. காட் ஒப்பந்தத்தில் யாரைக்கேட்டு கையெழுத்துப்போட்டார். இந்த பாராளுமன்றம் எதற்காக?.
இப்போது மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையப்பம் இட்டாரே! அந்த ஒப்பந்ததில் என்ன இருக்கிறது என்று மக்களிடம் தெரிவித்தாரா? இந்திய அணு ஆய்வுகளை அமெரிக்கா சோதனையிட வழிவகுக்கும் இரகசிய ஒப்பந்தம் மன்மோகன் அரசால் சென்ற ஆண்டு கையப்பம் இடப்பட்டது. அதன் விவரங்களை வெளியிடுமாறு அதன் ஆட்சிக்கு ஆதரவு தரும் பொதுவுடமைக் கட்சிகள் பலமுறை கேட்டாலும் அவை அவர்களுக்காவது கொடுக்கப்பட்டதா? பாராளுமன்றத்தில் உறுப்பினர்களிடம் இவை விவாதிக்கப்படுவது இல்லை. நீங்கள் அனுப்பும் உறுப்பினர்களை ஆட்சியாளர்கள் ஒருபொறுட்டாகவே எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. எதையுமே விவாதிக்காமல் அமெரிக்க சேவை செய்யும் அமைப்பாகவே இந்திய அரசு மாறிப்போயுள்ளது.
தேசபக்தி என்று அரசியல் வாதிகள் சொல்வதை மக்கள் எப்போதும் இந்திய தேசபக்தி என தவறாகவே புரிந்து கொள்கிறார்கள். அது உண்மையில் அமெரிக்க தேசபக்திதான்.
அன்று வெள்ளையன் வியாபாரத்திற்கு வந்தான். பின்னர் ஆட்சி அவர்களிடம் சென்றது . இன்று, இப்போது ஆட்சி நம்மிடம் உள்ளது. ஆனால் நமது பட்ஜெட்டை அமெரிக்க எடுபிடிகளான உலகவங்கியும், சர்வதேச செலாவணி நிதியமும் போடுகிறது. பட்ஜெட் போடும் பேனா நமது ஆட்சியாளர்கள் கையில், ஆனால் அமெரிக்காதான் இவர்கள் கையைப்பிடித்து எழுதுகிறது. நீங்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் என்ன பயன்?. எதையும் விவாதிக்காமல் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டிற்கு இந்தியாவை எலம் விடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
ஈரான் எரிவாயுத்திட்டத்தை அமெரிக்காவின் கட்டளைப்படி கைவிட்டது இந்திய அரசு. அத்திட்டத்தினை முனைப்புடன் செயல்படுத்த முனைந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் மணி சங்கர் அய்யர் அப்பொறுப்பிலிருந்து அமெரிக்க கட்டளைப்படி தூக்கி எறியப்பட்டார். இது தான் இவர்களின் தேசபக்தி.
மத்திய அரசின் நிலைதான் இப்படி என்றால் மத்திய அரசின் கைக்கூலிகளாகவே மாநில அரசுகள் செயல்படுகின்றன. இந்த அதிகாரமில்லாத ஆட்சியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்படி நடந்தாலும் எத்தனை முறை மக்கள் திரும்ப திரும்ப வாக்களிப்பது ஏன்?
"மனிதன் தண்ணீரின் குணத்தை ஒத்தவனாக இருக்கிறான்." "எத்தனைமுறை சூடேற்றினாலும் அவன் குளிந்து போகிறான்".
"எவ்வளவு உயரமான மலையின் உச்சியில் அவனை வைத்தாலும் அவன் பள்ளத்தை நோக்கியே பாய்ந்தோடிவருகிறான்".
அப்படியேதான்!
"அவன் எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் மறந்து போகிறான்". "அந்த மறதிதான் இந்த தேர்தல் கொள்ளையர்களுக்கு சாதகமாகிப் போகிறது".
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
தேர்தலைப் புறக்கணிப்போம்!!
தேர்தலைப் புறக்கணிப்பு இதற்கு தீர்வாகுமா?
தேர்தலைப் புறக்கணித்தால் தீயவர்கள் ஆட்சிக்கு வ்ந்துவிடமாட்டார்களா?
இதற்கெல்லாம் பதில்?..........?........?
தொடரும்.....
15 comments:
புறக்கணிக்க வேண்டுமா?
அக்கிரமம்.
குழந்தையை குளிப்பாட்டி கொலை செய்வதா? என்ன சொல்ல வருகிறீர்கள்!
---மழை நீர் சுத்தமாகத்தான் பொழிகிறது; பின்னர் சாக்கடையில் கலந்தவுடன் சாக்கடையாகிறது----
ஆகா! என்ன அற்புதமான தத்துவம்! எங்க பு(ப)டிச்சீங்க சுகுமாறான்.
ஐயா, இங்க பிரச்சினையே சாக்கடையை சுத்தம் செய்வத எப்படி என்பதுதான்! நீங்க என்னன்னா சாக்கடையை எப்படி கூவமாக மாத்தலாம் என்பதற்கு ஐடியோ கொடுக்கிறீங்களே! அதான் வேனாங்கறது. சாக்கடையை சுத்தம் செய்யனும்னா - சுத்தமான கங்கையும் - காவேரியையும் சாக்கடைக்குள் பாய்ச்சினாலே சாக்கடை இருந்த அடையாளமே தெரியாமல் போய்விடும். சமீப மழையில் கூலம் உண்மையிலேயே மணக்கலையா அது போல.
ஐயா இந்த மண்ணுலதான் ஊழல் பண்ணாத அண்ணா, காமராஜ், கக்கன், ஏன் சமீபகாலத்தில சங்கரய்யா, நல்லகண்ணு, ஹேமச்சந்திரன், பாலபாரதி, மகேந்திரன்... இன்னும் பேர் தெரியாத எவ்வளவோ பேர் இருக்காங்க! அதெல்லாம் நீங்க படிக்கிற புத்தகத்துல போடலயா?
ஓட்டு போடுற மக்கள்கிட்ட ஒழுங்கா இருக்கிற உங்கள மாதிரியான ஆட்கள் வேலை செஞ்சா சட்டமன்றம், பாராளுமன்றம் போகலாமே! அத விட்டுட்டு எங்கயோ ஒளிஞ்சிக்கிட்டு ஜனாநாயகம் - பணநாயகம் என்றெல்லாம் பேசுறது மக்களை மேலும் குழப்பத்தான் உதவும்.
சுகுமாறன் குழம்பாதீங்க! குழப்பாதீங்க!! ஓட்டு போடுங்க!!!
Not participating in the election is not going to solve the problems.
ஐயா சுகுமாரன்,
சாக்கடைய அப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்க. அது நாளைக்கே உங்களையும் பாதிக்கும். (அப்போவும் நீங்க இப்படித்தான் புலம்பிகிட்டிருப்பீங்க).
அரசியல தொழிலா நெனச்சு இப்போ பன்றாங்க. அது சேவைத்துறையா மாத்துற வேலையப் பாருங்க. அத விட்டுட்டு, வோட்டுப் போடாதீங்கன்னு பிரசாரம் பன்னாதீங்க. ஆப்கானில் போய் பாத்தீங்கன்னா தான் ஜனநாயகம்னா என்னன்னு தெரியும் (நான் சொல்வது அங்கே நடக்கும் தேர்தலை மட்டும் தான்). அங்கே சமீப தேர்தல்ல (அது எப்படி நடந்தாலும்) விழுந்த ஓட்டு சதவிகிதத்துலயே ஒவ்வொரு வோட்டும், தேர்தலும் எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுக்கலாம்.
உதவி பன்னலைன்னாலும், உபத்திரவமாவது பன்னாம இருங்களேன் சுகுமாரன். மன்னிச்சுருங்க.
சீனு.
//ஜனாநாயகம் - பணநாயகம் என்றெல்லாம் பேசுறது மக்களை மேலும் குழப்பத்தான் உதவும்.//
அய்யா! ஏற்கனவே மக்களை எல்லோரும் குழப்பி இருக்கிறார்களோ! மழுப்ப வேண்டாம். விளக்கமாக பதில் எழுதுங்கள்!.
//தற்ஸ் தமிழ் இணையத்தளத்திலிருந்து//
ஒரு கட்டுரையை நண்பர் குமார் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளார் அவருக்கு எனது நன்றி!
இரா.சுகுமாரன்
//சாக்கடைய அப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்க. அது நாளைக்கே உங்களையும் பாதிக்கும். (அப்போவும் நீங்க இப்படித்தான் புலம்பிகிட்டிருப்பீங்க// //உதவி பன்னலைன்னாலும், உபத்திரவமாவது பன்னாம இருங்களேன் சுகுமாரன். மன்னிச்சுருங்க.//
கொள்ளை அடிப்பவர்களுக்கு உதவிகரமா இல்லன்னாலும் உபத்திரவமாவது கொடுக்க கூடாது அப்படித்தானே! என்னே பாசம் மக்கள் மீது.
என்ன பதிலையே கானும்?
யாரோ என்வலைப்பதிவில் விளையாடுகிறீர்கள் என்பது தெரிகிறது. அவர்கள் அவர்கள் கருத்தை பதிவு செய்ய நாகரீகமாக பதிவுசெய்தால் நன்றாக இருக்கும்.
புதுச்சேரி இரா. சுகுமாரன்
சுகுமாரன் அவர்களே, இது ஒன்றும் புதிது அல்ல. உங்களுக்கு அவ்வாறு பின்னூட்டமிட்டது போலி டோண்டு என்ற இழிபிறவியாகும். அவனுடைய dondu(#4800161) என்ற டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் திரைக்குக் கீழே இடது பக்கம் அவனுடைய ப்ளாக்கர் எண்ணான 11882041 வெளியில் தெரியும். உண்மை டோண்டுவுடைய ப்ளாக்கர் எண் 4800161.
யார் என் பதிவில் வந்துப் பின்னூட்டமிட்டாலும் அவர்களுக்கு அசிங்கமாகப் பின்னூட்டம் இடுவது அவன் வாடிக்கையாகிப் போயிற்று. அதனாலேயே அவனது சொந்தப் பதிவு தமிழ்மணத்திலிருந்து தூக்கப்பட்டது. கற்றாருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். போலி டோண்டு என்ற இந்த இழிபிறவிக்கோ செல்லும் இடமெல்லாம் கல்தா என்றே வந்திருக்கிறது.
வைக்கோவுக்கு வேட்டியில்லை என்று நீங்கள் போட்டதன் மூலம் தன் மானத்தைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்று தெரிகிறது. இப்போது இந்த இழிபிறவி உங்களை வெளிப்படையாக மிரட்டுகிறது, எனக்கு பின்னூட்டம் போடக்கூடாது என்று. வேட்டியை இழக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள்தானே.
இன்னொன்று, அந்த இழிபிறவியின் அசிங்கப் பின்னூட்டங்களை அழியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் அப்படித்தான் மாடரேஷனில் செய்கிறோம். அசிங்கப் பின்னூட்டமாக இல்லையென்றாலும் கூட என்னுடைய ஐடியை திருடி எழுதுகிறான் அவன். அதுவே ஒரு குற்றம்தான். ஆகவே dondu(#4800161) என்ற டிஸ்ப்ளே பெயரைத் தாங்கி வரும் பின்னூட்டங்கள் எலிக்குட்டி சோதனையில் என்னுடையவை அல்ல என்று தெரியும் பட்சத்தில் அவற்றை அழிப்பதே முறை என்பதையும் உங்கள் மேலான கவனத்துக்கு வைக்கிறேன். நல்ல முடிவு எடுப்பீர்கள் என நம்புகிறேன்.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைத் தெரிவிக்க அதன் நகலை என்னுடைய "கொள்கை வேட்டி என்றால் அண்ணாவுக்கும் வேட்டியில்லை" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: உங்கள் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயலிழ்க்கச் செய்யுங்கள். அதர் ஆப்ஷனை வைத்து அவன் எலிக்குட்டி சோதனையில் என் ப்ளாக்கர் எண் தெரியுமாறு செய்ய முடியும். அதிலும் நீங்கள் பின்னூட்டம் இடும் பக்கத்தில் போட்டொ எனேபிள் வேறு செய்யவில்லை. அதனால்தான் இப்பின்னூட்டத்தின் நகலை நான் என்னுடைய பதிவில் இட வேண்டியிருக்கிறது.
Post a Comment