Thursday, May 04, 2006

வை.கோ. பொடா பிணையும் தி.மு.கவும்

கொடிய பொடாச்சட்டத்திலிருந்து அவர்களுக்கு எப்படி பிணை கிடைத்தது என்பதை சு.ப.வீரபாண்டியன் விளக்கினார் அவரின் சுருக்கமான் பேட்டி.

பொடா சட்டத்திலிருந்து எப்படி வெளியில் வந்தீர்கள் என்று கேட்டதற்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.

நான் இன்னும் பொடாச்சட்டத்திலிருந்து வெளிவரவில்லை. பிணையில் வந்துள்ளோம். அவ்வளவுதான்.

பிணை எப்படி கிடைத்தது? என்பது பற்றி குறிப்பிடுகையில்

நாங்கள் இந்த சட்டத்தின் படி குறைந்தது பத்து ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் இந்த நாளில் எப்படி எங்களுக்கு பிணை கிடைத்தது என்பதை நான் சொல்லியே ஆகவேண்டும்.

அன்றைய மத்திய அரசு பொடாசட்டத்தினை மென் மேலும் கடினமாக்கிக் கொண்டிருந்தது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு வாய்மொழி ஆதரவும் பொடாச்சட்டத்தின் படி குற்றமாக கருதப்படும் என்று உச்ச நீதி மன்றத்தில் அன்றைய மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இந்து செய்தித்தாளில் முதல் பக்கத்தில் அந்த செய்தி வெளியாகி இருந்தது.

அதைப்பார்த்த கலைஞர் உடனே டி. ஆர். பாலுவை காலை 5 மணிக்கு தொடர்பு கொண்டார்.

கருணாநிதி : இந்து முதல் பக்கத்தை பார்த்தீங்களா?

டி. ஆர் .பாலு : இங்கே ஒரே மழை, அதனால இன்னும் இங்க பேப்பர் வரல,

கருணாநிதி :: அமைச்சர் வீட்டுக்கு பத்திரிக்கை வரவே இவ்வளவு நேரமா?. தொலைபேசியை கோவமாக வைத்து விடுகிறார்.

டி. ஆர் .பாலு: (பேப்பரை தேடி பிடித்து வாங்கி படித்த பின் தொடர்பு கொள்கிறார்) ஆமாம் என்ன செய்யலாம்.

கருணாநிதி : என்ன செய்வீங்களோ தெரியாது. அதை மறுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியுமா? முடியாதா? .கூட்டணியில நீடிக்கிறதா? வேண்டாமா? என கேளுங்கள், என்றார்.

அன்று டில்லியில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் மிக்கடுமையாக அன்று பேசினார் டி.ஆர். பாலு,

அவுட்லுக் இதழ் அதனை பதிவு செய்துள்ளது. டி.ஆர். பாலு ரகளை செய்தார் என்று அப்பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.

அப்படி ரகளை செய்ததால் தான் மத்திய அரசு அடுத்த வாரமே மற்றுமொறு அறிக்கை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் இளம் நீதிபதிகள் மத்திய அரசின் கொள்கையை தவறாக புரிந்து கொண்டார்கள் ஆனால் மத்திய அரசு அவ்வாறு கருதவில்லை. வாய் மொழி ஆதரவு பொடாச்சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்பதே மத்திய அரசின் கருத்து என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

அந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது.

டி.ஆர். பாலுவும், தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களும் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் எங்களுக்கு பிணைகிடைத்தது.

அதற்காக நான் டி.ஆர். பாலு அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியுள்ளது.

இதைப்பற்றி குறிப்பிடும் போது அந்த அம்மாவிற்கு மிகவும் வேண்டிய அதிகாரிகள் தான் நீதிமன்றத்தில் இயக்கங்களுக்கு வாய்மொழி ஆதரவும் பொடாச் சட்டத்தின் படி குற்றமாகும் என மத்திய அரசு கருதுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார். என டி.ஆர். பாலு தம்மிடம் சொன்னதாக சு.ப.வீ. குறிப்பிட்டிருந்தார்.

என வணக்கம் தமிழகத்தில் சு.ப.வீ பதில் அளித்துள்ளார்.

அண்ணன் வைகோவும் அதே அடிப்படையில் தான் சிறையிலிருந்து வந்தார்.

ஆனால் நான் வெளியே வர கலைஞர் காரணமல்ல என்று வை.கோ குறிப்பிட்டிருந்ததை நம் வலைப்பதிவாளர்கள் மறந்திருக்க முடியாது.

6 comments:

Vaa.Manikandan said...

please dont waste ur time by speaking abt useless fello vaiko

இரா.சுகுமாரன் said...

//வாய் மொழி ஆதரவு பொடாச்சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்பதே மத்திய அரசின் கருத்து என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.//

என்ற இரண்டாவதாக அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படியில் தான் எங்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. என்று சு. ப. வீ தெரிவித்திருந்தார் இந்த செய்தி விடுபட்டுள்ளது.

Anonymous said...

அந்த வைகோ திருந்த போவதில்லை. ஏன் அந்த கூட்டணி அவரால் வெற்றி பெறப் போவதுமில்லை. விட்டுத்தள்ளுங்கள்.

இரா.சுகுமாரன் said...

KUMARAN
Thanks for your visit

Anonymous said...

//please dont waste ur time by speaking abt useless fello vaiko//

உங்க கட்சி கூட்டணியில இருந்தாமட்டும் தான் ஆதரிப்பீங்களோ!
ரொம்பத் திட்டாதீங்க, அடுத்த தடவ உங்க கிட்ட வந்த நாங்க திட்டுவோம்.
இப்படி கூட்டணி கட்சி மாறினா திட்டு வாங்கியே மாளாது போல இருக்கு.

Anonymous said...

வை.கோ செய்தது மாபெரும் தவறு. அவர் சாகும்வரை கலைஞருக்கும் அவர்பின் வரும் தலைமுறைக்கும் அடிமையாக இருந்திருக்க வேண்டும். அதைவிட்டு, சுயமரியாதை, தன்மானம் என்று புறப்பட்டுவிட்டார்.