Friday, May 12, 2006

நடிகர் ஆனந்த ராஜ் டெபாசிட் இழந்தார்

புதுவையில் அ.தி.மு.க கட்சி சார்பாக போட்டியிட்ட நடிகர் ஆனந்த ராஜ் டெபாசிட் இழந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் அவரை விட 7,799 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் போட்டியிட்ட உருளையன் பேட்டை தொகுதி விபரம்:-

மொத்த வாக்குகள் 18,903
பதிவானவை- 16,154
சிவா (தி.மு.க)- 8,509
நேரு (சுயேச்சை)- 6,549
ஆனந்தராஜ் (அ.தி.மு.க)- 710
விஜயலட்சுமி(தே.மு.தி.க)- 149
சுந்தரி (பா.ஜ.க)- 83
எஸ். வி. சிவா(சுயேச்சை)-36
எஸ். நேரு (சுயேச்சை) 83
நேருதாசன் (சுயேச்சை) 35


புதுவையை பொருத்தவரை கட்சிகளை விட வேட்பாளரின் தனித்தன்மையே அதிகம் கவனிக்கப்படுகிறது.

புதுவை முதல்வர் ரெங்கசாமி பதிவான 34,508 வாக்குகளில் 31,099 வாக்குகள் பெற்று பதிவான வாக்குகளில் 90.12 சதவிகித வாக்குகள் பெற்றது காங்கிரசு கட்சிக்கான வெற்றி அல்ல, மாறாக முதலவர் ரெங்கசாமிக்கு கிடைத்த வெற்றியாகும்.

அதே போல் வேட்பாளர்களைப் பொருத்து தான் இங்கு வெற்றி வாய்ப்புகள் அமைந்துள்ளன.

புதுவையில் மொத்தமாக 10 சதம் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

கருப்பு said...

வெறும் 710 ஓட்டு வாங்கி இருக்கிறார் என்றால்...

புதுச்சேரி காரங்கதான் உண்மையான மக்கள். நடிகர் என்பதற்காக கொஞ்சமும் அசைந்து கொடுக்காத மனப்பான்மை கண்டு ஆனந்தம்.

இரா.சுகுமாரன் said...

நன்றி கருப்பு

புதுச்சேரி மக்கள் கொஞ்சம் புத்திசாலிகள் போல் தெரிகிறது.

பிரதீப் said...

நிஜமாவே புத்திசாலிகள் ஐயா.
தலைவர்களைக் கூடத் தோற்கடித்து விட்டு (இதில் திமுக, புமுகா எல்லாம் அடக்கம்) தொண்டர்களை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.

உங்கள் கூற்று உண்மை. கட்சியை விட நிற்பவர் முக்கியம். ஏனென்றால் பெரும்பாலான தொகுதிகள் மிகச் சிறியவை.

ரங்கசாமி ஒரு முன்னுதாரணமாக ஆகிவிட்டார்.

இரா.சுகுமாரன் said...

நன்றி பிரதீப்!

சிறிய பகுதி என்பதால் வேட்பாளர்களை நன்றாக மக்களுக்கு தெரிந்து போகிறது.

அதனால் அதிகம் கட்சிகளைப்பற்றி கவலைப் படுவதில்லையோ என நினைக்கிறேன்.