வைகோ ஒரு சிறந்த அரசியல் வாதி என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை, என்றே எனக்குத் தோன்றுகிறது அதனால் தான் இந்த பதிவை எழுத வேண்டியிருந்தது.
அரசியல் என்றால் என்ன?
1. பணம் சம்பாதித்தல்,
2. மக்கள் நலம் என்று சொல்லி மக்களை ஏமாற்றல்,
3. கட்சிநலம் என்று சொல்லி கட்சிக்காரர்களை ஏமாற்றுதல்,
4. முதலாளிகளுக்கு ஆதரவாகப்பேசி அவர்களிடம் தேர்தல் நிதிவாங்குதல், (அன்பளிப்பு)
இது தான் சிறந்த அரசியல்,
அரசியல் வாதியின் மூலதனம் வாய்ப்பேச்சு தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் வைகோ. தனது வாய்ப்பேச்சு மூலதனத்தை வைத்து எத்தனைகோடி சம்பாதிக்க முடியுமோ அவ்வளவும் செய்துள்ளார் இந்த வைகோ. எனவே இவர் சிறந்த அரசியல் வாதி என்பதில் எவருக்கும் ஐயம் எழ வாய்ப்பு இல்லை.
நான் என்னைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை, என்கட்சிக்கு எது நல்லதோ அதை செய்தேன் என்றார். கட்சி நலம் என்று பேசினாரே!. கட்சி நலன் என்றவுடன் பரவாயில்லை, வைகோ ஏதோ கட்சிக் காரர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார் என்று பலர் கருதியிருக்ககூடும். ஆனால் அது இல்லை.
மத்தியில் நான் அமைச்சர் நீ அமைச்சர் என்று போட்டி போடும் நிலையில் வைகோ அமைதியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அது தான் நாங்கள் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என்று, இது ஏதோ வைகோவின் மிகப்பரந்த மனப்பான்மை என்று பலர் அப்போது நம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் பின்னர் தான் தெரிந்தது, கருணாநிதியிடம் அவர் பேசிய வசனம்.
’’அண்ணே! அந்த கண்ணப்பனுக்கு வேண்டாம்னே. அந்த ஆளு நல்லா சம்பாரிச்சான், ஆனா யாருக்குமே செலவு செய்யல. என்னையும் வந்து பார்க்கல. அதேமாதிரி தான் அந்த ஆள் செஞ்சியாரும் கட்சிக்கும் ஒன்னும் செய்யல எனக்கும் ஒன்னும் செய்யல அதனால எங்களுக்கு அதிக சீட்டு தேவையில்லை“.
தமது கட்சிக்காரர்கள் தமக்கு பங்கு கொடுக்காமல் கொள்ளை அடித்தது தான் வைகோவின் எரிச்சல். அதனால் தான் இவர் ஆட்சியில் பங்கேற்கவில்லை.
கட்சிக்காரர்களின் நலனில் அக்கரையுடன் இருப்பதாக இவர் நடித்ததால் மிகவும் எரிச்சலடைந்த இல.கணேசன், செஞ்சியார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கணிசமான தொகைக்கு தங்களையும் அடமானம் வைத்துக் கொண்டு வைகோவையும் விலை பேசி விற்றுவிட்டார்கள்.
இவர்தான் பெரிய நியாய வாதியாயிற்றே வேண்டாம் அவர்கள் போகட்டும் என்று விட்டு விடவேண்டியது தானே! தன்னிடம் ஒரு பெரிய பெட்டி காட்டியவுடன் அப்படியே பல்டி அடித்து சிறந்த அரசியல் வாதியாகிவிட்டார்.
நிர்வாக சீர்கேடுகளைப் பற்றியெல்லாம் பேசும் வைகோ தமது கட்சியில் உள்ள இல. கணேசன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் தன்னையும் விற்றுக்கொண்டு வைகோ விற்கும் விலை வைத்த அரசியல் சீர்கேட்டை அவர் ஒரு போதும் பேசுவதில்லை.
இவர் கட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரையே சரியாக வைத்து நிர்வாகம் செய்ய இயலாத வைகோ, நிர்வாகச் சீர்கேட்டை பற்றி பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலம்.
கூட்டணி மாறியவுடன் மக்கள் பிறச்சனைப்பற்றி பேசாமல் அவரைக்காட்ட ஒரு தொலைக் காட்சி வேண்டும் என்பதற்காக அந்த தொலைக்காட்சிக்கு ஆதரவாக பேசினார். இதில் எங்கே மக்கள் நலம் உள்ளது. இது அடுத்த தேர்தலுக்கு முதலீடோ?
டாட்டாவின் மேல் வைகோவிற்கு எத்தனை பாசம், ரத்தன் டாட்டாவே அமைதியாக இருந்தார் ஆனால் வைகோவிற்கு இந்த முதளாளிகள் மீது எவ்வளவு பாசம்.
டாட்டா என்ன ஏழை ஊசி வியாபாரியா? பல்வேறு தொழில்களில் அவர்கள் ஏக போகம் செலுத்தவில்லையா?. ஏன் டாட்டாவின் ஏகபோகத்தை அவர் கண்டிக்கவில்லை.
தினகரன் ஒரு ரூபாய்க்கு கொடுப்பதால் தினமலர், தினமணி, தினத்தந்தி ஆகிய பத்திரிக்கைகளின் சுற்று மிகவும் குறைந்து போயுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பத்திரிக்கைகள் கருணாநிதி குடும்பத்தை எதிர்த்து எழுதிவருகின்றன.
அதே போல இந்தியா முழுவதும் ஒரு ரூபாய்க்கு தொலைபேசி என அறிவித்தவுடன் டாட்டா, ரிலையன்சு உள்ளிட்ட தொலை பேசி நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு என்றவுடன் வைகோ போன்ற கை கூலிகளை வைத்து டாட்டா போன்றோர் ச(தி)துரங்கம் ஆடுகின்றனர்.
தயாநிதி போன்றோரை நீக்கிவிட்டால் ஒரு ரூபாய் திட்டத்தை திரும்ப பெற்றுவிடலாம் என்ற டாடா, ரிலையன்சு கும்பலின் திட்டத்திற்கு வைகோ துணை போகிறார்.
எந்த அடிப்படையில் செயாவை சிறந்த அரசியல் வாதி என்கிறார். அப்படியானால் கடுமையாக எதிர்தது ஏன்?
கருணாநிதியால் 2 ருபாய்க்கு 1 கிலோ அரிசி தரமுடியாது என்றார். செயலலிதா அறிவித்தவுடன் புளகாங்கிதம் அடைந்து ஆதரிக்கிறார். இதுதான் நேர்மையான அரசியல் விவாதமா?
அவர் அரசியல் பேசுகிறாரா? அவர் அரசியலை விட அதிகம் அவதூறு தான்.
முதலாளிகளின் ஏகபோக குரல் கொடுப்பவராக காட்டிக்கொண்டு ஏதேனும் பிழைப்புதான் இவரின் கொள்கையாக இருக்கிறது.
ஏகாதிபத்தியம் என்றார். உலகை சுரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அவர் எப்போதாவது கண்டித்தது உண்டா?. அன்னிய மூலதனம் இங்கு வருவதால் இந்தியாவில் மூலதனச் சுரண்டல் நடக்கிறதே அதை எப்போதாவது அவர் கண்டித்திருக்கிறாரா?
தினகரனை திட்டி தினமலருக்கு ஆதரவு திரட்டுவது, உள்பட பல வேலைகள் இவருடையது. எப்போதாவது இவரின் ஈழ ஆதரவு கருத்துக்கு தினமலர் ஆதரவு தெரிவித்து இருக்கிறதா?
இவர் செயாத் தொலைக்காட்சியில் பேசும் போது சொன்னார். “நான் எதிர்த்தால் ஒரே அடியாய் எதிர்ப்பேன். அது போலத்தான் நான் அ.தி.மு.க வை எதிர்த்தேன் என்றார். சரண்டர் ஆனால், ஒரே அடியாய் சரண்டர் ஆவேன் என்று சொல்லாமல் தன்மானம் சுயமரியாதை பற்றி இவர் அடிக்கடி இன்னும் பேசிவருகிறார்.
ஏமாந்து விடவேண்டாம். அரசியல் நாடோடியான அவர் அடுத்த முறை கருணாநிதியை ஆதரித்து பேச வேண்டியிருக்கும். இதையெல்லாம் மறந்து விட்டு இப்படி கண்டமேனிக்கு பேசும் அவர்.
அடிக்கடி கூட்டணிமாறும் நிலையற்ற நாடோடித் தன்மையை அவர் ஒருபோதும் உணர்ந்ததாக தெரியவில்லை.
12 comments:
ஹலோ, இந்த தேர்(ரு)தலில் மாலடிமை (எ) இராமதாசு கட்சி மாறவில்லை என்பதால் வைகோ மாட்டிக் கொண்டார். ஒரு வழியில் மக்கள் இராமதாசை (அவர் பச்சோந்தியாக இருந்தாலும்) ஆதரித்ததால் கூட வைகோ இப்படி பச்சோந்தி ஆகியிருக்கலாம்...
அவர் கட்சி மாறியது பற்றி இங்கு பேசவில்லை. பொட்டி வாங்கியது உள்ளிட்ட அவர் கட்சி விசயங்கள் பல இடம் பெற்றுள்ளன.
//வைகோ ஒரு தெருப்பொறுக்கி. ஞானக்கிறுக்கன்.//
இதுக்கு பேரு விமர்சனமல்ல, வைகோ போல கண்ட மேனிக்கு திட்டுதல்
வையகத்துகோமளிக்கு(வை.கோ)....
செயலலிதாகிட்ட இருக்கு தேர்தலுக்கு
அப்புறம்...ஆளானப்பட்ட மூப்பனாருக்கே அல்வா கொடுத்த மம்மி...பெட்டித்தலைவர் கோமாளிக்கு கொடுக்கமாட்டாரா...
wait and see thala...
Jeya countdown starts.........
ஈழ பிரச்சனைக்கு ஆதரவு கொடுக்க
பிரபாகரன் கிட்ட எத்தன பொட்டி வாங்கினாரோ?
கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
கருனாநிதிக்கு ஒரு கோபால்சாமி...
நல்ல வேளை தாலி அம்மா தருவதாய் சொல்லியிருக்கிறார். கலைஞர் சொல்லியிருந்தா வைகோ தாலி மட்டும் கொடுத்தா கட்றதுக்கு ஆள் யார் கொடுப்பாங்கன்னு கேட்ருப்பார், TV க்கு கரண்ட்டும் கேபிளும் யார் கொடுப்பான்னு கேட்டது போல.
மத்தியில் தேர்தலுக்கு தேர்தல் கருணாநிதி கூட்டணி மாறினால், அவர் என்ன செவ்ஓந்தியா?
தனது நலனுக்காகவும், தன் கட்சி நலனுக்காகவும், எல்லா கட்சிகளிலும் இது போன்ற கூட்டணி மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
உனக்கு வேலை கொடுத்த கம்பனி என்பதற்காக, அதிக சமபளத்துடன் நல்ல கம்பனியில் வேலை கிடைத்தால், நன்றிக்கடனுக்காக இங்கேயேவா இருக்க போகிறாய்?.
உங்களைப்பார்த்தால் "சொல்லுதல் யார்க்கும் அறியவாம்" என்று ஆரம்பிக்கும் குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது
good analysis
///ஜெயக்குமார் said...
மத்தியில் தேர்தலுக்கு தேர்தல் கருணாநிதி கூட்டணி மாறினால், அவர் என்ன செவ்ஓந்தியா?
தனது நலனுக்காகவும், தன் கட்சி நலனுக்காகவும், எல்லா கட்சிகளிலும் இது போன்ற கூட்டணி மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
உனக்கு வேலை கொடுத்த கம்பனி என்பதற்காக, அதிக சமபளத்துடன் நல்ல கம்பனியில் வேலை கிடைத்தால், நன்றிக்கடனுக்காக இங்கேயேவா இருக்க போகிறாய்?.
உங்களைப்பார்த்தால் "சொல்லுதல் யார்க்கும் அறியவாம்" என்று ஆரம்பிக்கும் குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது////
அடா அடா...என்ன ஒரு விளக்கம்...
கோபால்சாமி ல்லாம் உங்க முன்னாடி காலி...
வருகைக்கு நன்றி தரன்,
//ஈழ பிரச்சனைக்கு ஆதரவு கொடுக்க
பிரபாகரன் கிட்ட எத்தன பொட்டி வாங்கினாரோ?//
புலிகளுக்கு பிரச்சனையான நேரத்தில் ஒருமுறை 2 கோடி வாங்கிக் கொண்டு பொதுக்கூட்டம் நடத்தியதாகவும் ஒரு பழைய தகவல் இருக்கிறது.
திரு.சுகுமாரன்,
வைகோ பற்றிய சரியான அலசலைச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
வைகோவின் அணி மாற்றம் என்பது பெரிய விதயமில்லை. ஆனால், தமிழர்களுக்கு அவர் செய்திருக்கும் துரோகம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல.
இவர் தமிழ்ப்பயிரல்ல; களை.
ஈழத்திலே எப்படி கருணா கருதப் படுகிறாரோ,
அப்படித்தான் தமிழ்நாட்டு சிந்தனைக் களம் வைகோவைக் கருதுகிறது.
ஈழத்தமிழர்கள் பலருக்கு தமிழக அரசியல்
நிலைகள் சரியாகப் புரிவது போல் சென்று
சேர்வதில்லைபோலும். பல பேர் இன்னும் கூட வைகோ மேல் பெரிய எதிர்பார்ப்பை
வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏடுகளில், சிங்களத்திடம் பெட்டி வாங்கிக் கொண்டு தமிழ் நாட்டில் ஏடுகள், அரசியல் நடாத்துகிறார்கள் என்று அவ்வப்போது குரல்கள் ஒலிப்பதுண்டு.
இந்த வீராவேசப் பேச்சு வியாபாரியை ஈழத்தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் எச்சரிக்கையுடனேயே பார்க்க வேண்டும். ஏனெனில் அவர் செயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து தமிழர்களுக்கு செய்திருக்கும் துரோகம், ஈழத்திலே கருணா செய்ததாகக் கூறப்படுவதற்கு எள்ளளவும் குறைந்ததல்ல.
குறிப்பாக, பழ.நெடுமாறன் போன்றோர்கள் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் வைகோ போன்ற குப்பைகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டங்கள் போடுதலை நிறுத்த வேண்டும். அல்லாவிடில் பழ.நெடுமாறனின் மரியாதையும் தேய்ந்தே போகும். இது நிச்சயம்.
விளக்கமான கட்டுரையை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Dear Mr Sukumaran,
In what way Vaiko is worse than Kalignar, Dr Ramadoss or Jayalalitha or for that matter Congress Men.
All these johnnies have proved themselves to be detrimental to interests of Tamils and Tamil Nadu.
As KamaraJ Naadar once said all these characters are "Ore Kuttaiyil Voorina Mattaigal"
Post a Comment